கிரிக்கெட் பார்க்காததால் அவர் ரிஷப் பண்ட்ன்னு தெரியாது – அவசர நேரத்தில் காப்பாற்றிய பின்னணியை பகிர்ந்த பஸ் டிரைவர்

Risabh Pant Driver
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர இளம் வீரர் ரிஷப் பண்ட் டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்தில் சிக்கியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த வாரம் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் அடுத்ததாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அந்த நிலையில் வங்கதேச தொடருக்குப்பின் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் புத்தாண்டுக்கு தனது வீட்டுக்கு திரும்பி அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அதிகாலை 5.30 மணியளவில் புறப்பட்டுள்ளார்.

இருப்பினும் களத்திலேயே அதிரடியான வேகத்தில் விளையாடுவதை விரும்பும் அவர் காலை நேரத்தில் தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் சற்று வேகத்துடன் பயணித்த போது தூக்க கலக்கத்தை சந்தித்துள்ளார். அதனால் ரூர்க்கி எனும் ஊரில் சாலையில் வேகத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் அவரது கார் மோதியதால் தலை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் கடுமையான காயங்களை சந்தித்த அவரை பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

- Advertisement -

காப்பாற்றிய டிரைவர்:
இந்த விபத்துக்கு வேகம் மற்றும் தூக்க கலக்கத்தில் சென்றது முக்கிய காரணமாக அமைந்ததாக ரிசப் பண்ட் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கூறியுள்ளார். இருப்பினும் துரதிஷ்டவசமாக சந்தித்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று சச்சின், ரிக்கி பாண்டிங், வாசிம் அக்ரம் உட்பட இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என உலக முழுவதிலும் உள்ள ஜாம்பவான் முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

முன்னதாக விபத்துக்கு உள்ளானதும் சாதுரியமாக செயல்பட்ட ரிஷப் பண்ட் கண்ணாடி கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார். அதிர்ஷ்டவசமாக அடுத்த சில நிமிடங்களில் நெருப்பு பற்றி கார் எரிந்த பின்பு தான் அந்த பகுதிகளில் சென்ற வாகனங்களில் வந்தவர்கள் அதை கவனித்து அவரைக் காப்பாற்ற துவங்கினர். இந்நிலையில் அந்த முக்கிய நேரத்தில் அரியானா மாநில ரோடுவேஸ் சார்பில் இயக்கப்படும் ஒரு பேருந்தின் டிரைவராக இருந்த சுசில் மன் என்பவர் தான் முதலில் அந்த சம்பவத்தை பார்த்து பேருந்தை நிறுத்தி விட்டு காப்பாற்றியுள்ளார்.

- Advertisement -

ஆனால் தாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்பதால் அவர் யார் என்று தெரியாமலேயே எப்போதும் போல மனிதநேயத்தில் காப்பாற்றியதாக தெரிவிக்கும் அந்த டிரைவர் தம்முடன் வந்த பயணிகள் தெரிவித்த பின்பு தான் அவர் ரிசப் பண்ட் என்பதை அறிந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் காரிலிருந்த அவரது பணத்திலிருந்து 7000 – 8000 ரூபாய் எடுத்து ஆம்புலன்ஸ்க்கு கட்டணமாக செலுத்தியதாகவும் அந்த டிரைவர் கூறியது பின்வருமாறு. “அந்த நிகழ்வைப் பார்த்ததும் பேருந்தை ஓரத்தில் நிறுத்தி விட்டு டிவைடர் நோக்கி நான் வேகமாக ஓடினேன். முதலில் அவருடைய கார் பேருந்துக்கு அடியில் இருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் அது நிற்பதற்கு முன்பாக பல முறை கட்டுப்பாட்டை இழந்து சுழன்றது”

“அப்போது உள்ளே இருந்த டிரைவர் (ரிஷப் பண்ட்) பாதி கண்ணாடியை திறந்து வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் தாம் ஒரு கிரிக்கெட்டர் என்பதையும் தெரிவித்தார். ஆனால் நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்பதால் அவர் ரிசப் பண்ட் என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய பேருந்தில் வந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். அதன்பின் காரிலிருந்து அவரை வெளியேற்றிய நான் உள்ளே வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். மேலும் அவருடைய பர்ஸிலிருந்து 7000 – 8000 ரூபாயை எடுத்து ஆம்புலன்ஸ்க்கு கொடுத்தேன்” என்று கூறினார்.

இதையும் படிங்கPAK vs NZ : பயத்தை காட்டிய நியூஸிலாந்து, பல்ப் தோல்வியிலிருந்து பாகிஸ்தான் எஸ்கேப் ஆனது எப்படி? விவரம் இதோ

அத்துடன் தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்திற்கு இந்த தகவலை தெரிவிக்குமாறு ரிசப் பண்ட் தம்மிடம் தெரிவித்ததாக கூறும் அந்த டிரைவர் அதற்குள் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட்டதால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மேலும் கூறினார். எப்படியோ அவரைக் காப்பாற்றிய டிரைவருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

Advertisement