PAK vs NZ : பயத்தை காட்டிய நியூஸிலாந்து, பல்ப் தோல்வியிலிருந்து பாகிஸ்தான் எஸ்கேப் ஆனது எப்படி? விவரம் இதோ

Pak vs NZ Devon Conway
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. முன்னதாக இந்த வருடம் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோற்ற பாகிஸ்தான் சொந்த மண்ணில் இங்கிலாந்து (3 – 0) மற்றும் ஆஸ்திரேலியாவிடம் (1 – 0) டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விகளால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்க இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி டிசம்பர் 26ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி இம்முறை சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து அவுட்டானது. அப்துல்லா சபிக் 7, இமாம்-உல்-ஹக் 24, ஷான் மசூட், சவுத் ஷாகீல் 22 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 161, சர்ப்ராஸ் அகமது 86, ஆகா சல்மான் 103 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து 612/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து பாகிஸ்தானுக்கு பதிலடியும் அதிர்ச்சியும் கொடுத்தது. அந்த அணிக்கு 183 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த டேவோன் கான்வே 92 ரன்களும் டாம் லாதம் சதமடித்த 163 ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அடுத்து வந்த முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனுடன் கை கோர்த்து மிடில் ஆர்டரில் ஹென்றி நிக்கோலஸ் 22, டார்ல் மிட்சேல் 42, டாம் பிளன்டல் 47 என முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்தனர்.

தோல்வியிலிருந்து எஸ்கேப்:
மறுபுறம் நங்கூரமாக நின்று 772 நாட்கள் கழித்து முதல் முறையாக சதமடித்த கேன் வில்லியம்சன் 21 பவுண்டரி 1 சிக்சருடன் இரட்டை சதமடித்த போது (200*) நியூசிலாந்து டிக்ளேர் செய்தது. மறுபுறம் டெயில் எண்டர் இஷ் சோதி 65 ரன்கள் அடிக்கும் அளவுக்கு சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 174 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 96 ரன்கள் குவித்த போதிலும் சபிக் 17, ஷான் மசூட் 10, பாபர் அசாம் 14, ஆஹா சல்மான் 6 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இருப்பினும் சர்ப்ராஸ் அகமது 53 ரன்களும் ஷாகீல் 55* ரன்களும் குவித்ததால் தப்பிய பாகிஸ்தான் தங்களது 2வது இன்னிங்ஸை 311/8 ரன்கள் எடுத்த போது இங்கிலாந்து போல வெற்றி பெறுவதற்காக 5வது நாள் மாலை 4 மணிக்கு தைரியமாக டிக்ளர் செய்வதாக அறிவித்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக இஷ் சோதி 6 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் கடைசி ஒன்றரை மணி நேரத்தில் 90 பந்துகளில் 138 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற டி20 மோடில் களமிறங்கிய நியூசிலாந்துக்கு மைக்கேல் ப்ரெஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார்.

ஆனால் டேவோன் கான்வே 2 பவுண்டரியுடன் 18* (16) ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த டாம் லாதம் அதிரடியாக 3 பவுண்டரியும் 1 சிக்சரையும் பறக்க விட்டு 35* (24) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். அதனால் 7.3 ஓவரில் 61/1 ரன்களை எடுத்த நியூசிலாந்து வெற்றியை நெருங்கியதால் பாகிஸ்தான் அணியினர் பதற்றமடைந்தார்கள்.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் அதை ஆராய்ந்த நடுவர்கள் இப்போட்டி டிராவில் முடிவதாக அறிவித்ததால் தோல்வியிலிருந்து பாகிஸ்தான் தப்பியது என்றே கூறலாம். ஏனெனில் கொஞ்சம் வெயிலும் வெளிச்சமின்மையும் கிடைத்திருந்தால் எஞ்சியிருந்த 7.3 ஓவரில் 9 விக்கெட்டுகளை கையில் வைத்திருந்த நியூசிலாந்து இப்போட்டியில் ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய பாகிஸ்தானை அடித்து தேவையான 77 ரன்களை எடுத்து வென்றிருக்கும்.

இதையும் படிங்கஉலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு 2022ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நிகழ்ந்த 5 சர்ச்சை தருணங்கள்

அந்த வகையில் இயற்கையின் உதவியுடன் தப்பினாலும் 2022ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றியை பதிவு செய்ய முடியாமல் பாகிஸ்தான் பரிதாப சாதனையை படைத்துள்ளது. அதனால் வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அந்த அணியை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். மறுபுறம் முடிந்த வரை வெற்றிக்கு போராடிய நியூசிலாந்துக்கு இரட்டை சதமடித்த கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Advertisement