உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு 2022ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நிகழ்ந்த 5 சர்ச்சை தருணங்கள்

Kohli IND vs PAK
- Advertisement -

2022 ஆங்கில வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான மறக்க முடியாத நிகழ்வுகள் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்துக்கு இந்த வருடம் மிகச்சிறந்ததாக அமைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு சுமாராகவே அமைந்தது. இருப்பினும் இந்திய ரசிகர்களுக்கு சூரியகுமார் யாதவ் எனும் சூப்பர் ஸ்டார் கிடைத்ததும் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியதும் ஆறுதலாக அமைந்தது. அதே சமயம் இந்த வருடம் சில நிகழ்வுகள் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உலகம் முழுவதிலும் பேசும் அளவுக்கு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அவைகளைப் பற்றி பார்ப்போம்

5. கடுப்பான பண்ட்: கோடைகாலத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ஜோஸ் பட்லர் அதிரடி சத்தத்தில் (116) 222 ரன்கள் குவித்தது. அதை துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் 28, ரிஷப் பண்ட் 44, லலித் யாதவ் 37 என முக்கிய வீரர்கள் அதிரடியாக போராடி ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட போது ஒபேத் மெக்காய் வீசிய முதல் 3 பந்துகளில் ரோவ்மன் போவல் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டார். ஆனால் 3வது பந்து இடுப்புக்கு மேல் வந்ததால் நோபால் கொடுக்க வேண்டிய அம்பையர் அமைதியாக இருந்தது டெல்லி அணியினரை அதிருப்தியடைய வைத்தது.

அப்போதும் நடுவர் நோபால் வழங்காததால் கடுப்பான கேப்டன் ரிசப் பண்ட் தமது அணியினரை களத்திலிருந்து வருமாறு அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஷேன் வாட்சன் அவரை அடக்கிய நிலையில் மற்றொரு பயிற்சியாளர் பர்வீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் கடைசி வரை நியாயம் கிடைக்காத நிலையில் ரிசப் பண்ட் போன்றவர்களுக்கு அடுத்த நாள் அபராதம் விதிக்கப்பட்டது.

- Advertisement -

4. கன்னத்தில் அறை: நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டைலர் ஓய்வுக்கு பின் வெளியிட்ட தன்னுடைய ப்ளாக் அண்ட் வைட் எனும் சுயசரிதை புத்தகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது ஒரு போட்டியில் டக் அவுட்டானதற்காக ராஜஸ்தான் அணி உரிமையாளர் தன்னுடைய கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அத்துடன் மாநிறமாக இருப்பதால் நியூசிலாந்து அணியில் நிறைய தருணங்களில் வெள்ளையாக இருக்கும் வீரர்களால் நிறவெறி கிண்டல்களுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தது உலக அளவில் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

3. மன்கட் தீப்தி: கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் எடுத்தது. அதைத் துரத்திய இங்கிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 118/9 என தோல்வியின் பிடியில் சிக்கியது.

இறுதியில் 17 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்ட போது வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்ததால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இருப்பினும் ஐசிசி மற்றும் எம்சிசி நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்டும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்தினர் அடுத்த ஒரு மாதத்திற்கு கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கு நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலகக்கோப்பை வென்றது போல் இல்லாமல் விதிமுறைக்குட்பட்டே தீப்தி நடந்து கொண்டதாக இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தார்கள்.

2. போலி பீல்டிங்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயித்த 184 ரன்களை துரத்தும் போது எரிமலையாக அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸ் 7வது ஓவரில் டபுள் எடுக்க ஓடினார். அப்போது பந்தை தடுத்து அக்சர் பட்டேல் எறியும் போது இடையே நின்ற விராட் கோலி தாம் எறிவது போல் பாவனை செய்தார்.

இருப்பினும் அவரை வங்கதேச பேட்ஸ்மேன்கள் இருவருமே பார்க்காத நிலையில் அவரால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில் விதிமுறைப்படி நடுவரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் போலியான பீல்டிங் செய்ததற்காக நடுவர் வேண்டுமென்றே 5 ரன்கள் பெனால்டி கொடுக்கவில்லை என்று போட்டியின் முடிவில் தெரிவித்த நூருல் ஹுசைன் அது கொடுக்கப்பட்டிருந்தால் தாங்கள் தோற்றிருக்க மாட்டோம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

1. கொதித்த பாகிஸ்தான்: அதே டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில் வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 83* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

ஆனால் முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரில் இடுப்புக்கு மேலே வந்த பந்தை சிக்ஸர் அடித்த அவர் உரிமையுடன் நோபால் கேட்டதால் நடுவர் வேண்டுமென்றே பணத்தை வாங்கிக் கொண்டு கொடுத்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொந்தளித்தனர்.

இதையும் படிங்கவீடியோ : பேசாம நாம எல்லாரும் இந்தியாவுக்கு அடிமையாகிடலாமா? செய்தியாளரிடம் ரமீஸ் ராஜா அனல் பறக்கும் கருத்து, நடந்தது என்ன

அத்துடன் அடுத்ததாக வீசப்பட்ட பந்தில் போல்ட்டான விராட் கோலி ஃப்ரீ ஹிட்டில் 2 ரன்களை எடுத்தார். அப்போதும் நேர்மைக்கு புறம்பாக விராட் கோலி 2 ரன்கள் எடுத்ததாக விதிமுறை பற்றி தெரியாமல் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இன்று வரை சமூக வலைதளங்களில் பேசுவதை பார்க்க முடிகிறது.

Advertisement