பேசாம நாம எல்லாரும் இந்தியாவுக்கு அடிமையாகிடலாமா? செய்தியாளரிடம் ரமீஸ் ராஜா அனல் பறக்கும் கருத்து, நடந்தது என்ன

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய கோப்பையில் மட்டும் மோதி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் மோதிய இவ்விரு அணிகள் அடுத்ததாக 2023ஆம் ஆண்டு அதே போல் மோதுவதற்கு வாய்ப்பிருந்தாலும் அது நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் 2023 ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை புதிய தலைவர் ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வாங்கியது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டுக்கு பயணித்து ஆசியக் கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அத்தொடரில் பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் அவர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் அப்படி கூறியது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் தங்கள் நாட்டுக்கு இந்தியா வரவில்லை என்றால் அதே 2023இல் உங்களது நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

- Advertisement -

அதை உறுதிப்படுத்திய அப்போதைய தலைவர் ரமீஷ் ராஜா 2022 ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் ஃபைனல் வரை சென்று சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் பங்கேற்காமல் போனால் இந்தியாவில் நடக்கும் 2023 உலகக்கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் மில்லியன் டாலர் இந்திய அணியை முதல் முறையாக உலகக்கோப்பையில் தோற்கடித்தோம், என்ன ஆனாலும் ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்த விட மாட்டோம் என விதவிதமான விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த அவரது தலைமையில் இந்த வருடம் பாகிஸ்தான் வரலாறு காணாத தோல்விகளை சந்தித்தது.

இந்தியாவின் அடிமைகளா:
அதனால் கடந்த வாரம் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் விமர்சகர் அவதாரம் எடுத்து இந்தியாவை விமர்சிக்க துவங்கியுள்ளார். அந்த வரிசையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நஜாம் செதி தலைமையிலான பாகிஸ்தான் வாரியம் 2023 ஆசிய கோப்பை விவகாரத்தில் இந்தியாவை எடுக்க முடிவுகளுக்கு தலையசைக்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியா பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருப்பதால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு பாகிஸ்தான் என்ன அடிமையா? என்ற வகையில் இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு காட்டத்துடன் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் தலைவராக இருந்ததில் ஒரு நல்ல அம்சம் என்னவெனில் பாகிஸ்தான் வாரியத்துக்கு நான் தலைமையை வழங்கினேன். உங்களுக்கு நினைவிருந்தால் கடந்த வருடம் திடீரென்று நியூஸிலாந்து பாதியில் நம் நாட்டிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்தும் நமது நாட்டுக்கு வந்து விளையாட மறுப்பு தெரிவித்தது. ஆனால் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையில் இங்கிலாந்து தாமாக வந்து 5க்கு போட்டிக்கு பதிலாக 7 டி20 போட்டிகளில் விளையாடியது. மேலும் இங்கிலாந்து வாரியத்தினர் லாகூர் மைதானத்திற்கு வந்து என்னிடம் முன்பு நடந்ததற்காக மன்னிப்பு கேட்டார்கள்”

“அதே போல் தான் ஆஸ்திரேலியாவும் வந்தார்கள். அந்த வகையில் தலைமைத்துவம் என்றால் என்ன? ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானிடம் ஒரு தொடரை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என்றும் அத்தொடரை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவோம் என்று இந்தியா சொல்லும் போது நாம் என்ன பதில் சொல்ல வேண்டும்? இந்தியா உலக கிரிக்கெட்டின் சக்தி வாய்ந்த நாடாக இருப்பதால் அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நாம் என்ன அவர்களது வேலையாட்களா? அடிமைகளா? அவர்கள் சொல்லும் அனைத்தையும் நாம் கேட்க வேண்டுமா? நாம் தனிமைப்படுத்தப்படலாமா என்று யோசித்து அரசாங்கத்திடம் கேட்போம். பின்னர் பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். தற்போது பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது”

இதையும் படிங்க: கதை முடிஞ்சுன்னு நினைச்சப்போ 7வது இடத்தில் களமிறங்கி டெல்லியை அதிர விட்ட இளம் தமிழக வீரர் – ரஞ்சி ட்ராபியில் அபாரம்

“உங்களுக்கு நல்ல ரசிகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எனவே உங்கள் அணிக்கும் ரசிகர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள். இது ஏற்கனவே பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என்பதால் இதர ஆசிய கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் விவாதிக்காமல் ஆசிய கோப்பையை பொதுவான இடத்திற்கு மாற்றக்கூடாது” என்று கூறினார்.

Advertisement