சி.எஸ்.கே அணியில் நான் இணைய இவரே காரணம். ஆனா அது தோனி கிடையாது – ராபின் உத்தப்பா வெளிப்படை

Uthappa-1
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரராக இருந்த ராபின் உத்தப்பா 2008 ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். தான் பங்கேற்ற முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் அடுத்த சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் பெங்களூரு அணியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற காரணத்தினால் அடுத்தடுத்து பல்வேறு பணிகளுக்கு மாறிக் கொண்டே இருந்தார். அந்த வேளையில் கொல்கத்தா அணிக்காக அவர் விளையாட சென்றபோது தான் சற்று நிலையான இடத்தைப் பிடித்தார் என்றே கூறலாம்.

Gautam Gambhir Robin Uthappa

- Advertisement -

இருப்பினும் கொல்கத்தா அணியில் இருந்த கடைசி சில சீசன்களில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால் ராஜஸ்தான் அணியில் அவர் தேர்வான போது பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. ஒருபுறம் வயது அதிகரித்துக்கொண்டிருக்க மறுபுறம் பார்ம் அவுட் காரணமாக அவரை களமிறக்க அணிகள் தயங்கின.

அப்போது தான் இரண்டு கோடி ரூபாய்க்கு சென்னை அணி அவரை டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக இறுதிகட்ட போட்டிகளில் ராபின் உத்தப்பாவை களமிறக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அவர் சென்னையில் துவக்க வீரராகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்படி சென்னை அணிக்காக தேர்வானது எவ்விதம் என்பது குறித்து தெளிவாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Uthappa-2

கொல்கத்தா அணியில் இருந்த போது நான் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அடுத்து ராஜஸ்தான் அணிக்கு தேர்வு ஆனாலும் எனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எனது எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் சையது முஷ்டாக் அலி தொடரில் நான் கேரளா அணிக்காக விளையாடி வந்தேன். அப்போது ஆந்திரா அணிக்காக தலைமை தாங்கி சென்னை அணியின் வீரர் ராயுடு விளையாடி வந்தார்.

- Advertisement -

அந்த சையது முஷ்டாக் அலி தொடரில் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் ராயுடு என்னிடம் வந்து நலம் விசாரித்தார். அப்போது இனி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். நானும் அவரிடம் எனது சில திட்டங்களை கூறினேன். அப்போது அவர் : நான் வேண்டுமென்றால் ஒன்று செய்கிறேன். உனக்கு சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் சாரின் தொலைபேசி எண்ணை தருகிறேன். நீ அவரை தொடர்பு கொள் உன்னை போன்ற ஒரு வீரர் எங்களுக்கு தேவை என்று ராயுடு என்னிடம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : 15 மாடியில் தொங்கவிட்டாங்க! 2013இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் நடந்த கொடுமையை விளக்கும் நட்சத்திர வீரர்

நானும் அவரது நம்பரை வாங்கிக் கொண்டு அவரிடம் பேசினேன். அதன் பின்னரே சிஎஸ்கே அணி தன்னை டிரேடிங் முறையில் அணியில் இணைத்ததாக ராபின் உத்தப்பா வெளிப்படையாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement