மொத்த நாடும் காத்திருக்கு.. தோனியின் ஹெல்ப் இல்லாம ருதுராஜ் சாதிப்பாரான்னு பாக்கலாம்.. ராயுடு பேட்டி

Ambati Rayudu 5
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 2 இடங்களை பிடிப்பதற்கு ஹைதராபாத், நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளிடையே போட்டி காணப்படுகிறது. இதில் ஹைதராபாத் அணி தங்களது அடுத்த 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்று 3வது இடத்தை பிடித்து விடும் என்று நம்பப்படுகிறது.

எனவே நான்காவது இடத்தை பிடிப்பதற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளிடம் உச்சகட்டமான போட்டி காணப்படுகிறது. தெளிவாக சொல்ல வேண்டுமெனில் அப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். தோல்வி பெறும் அணி வீட்டுக்கு கிளம்பும். எனவே நாக் அவுட் போன்ற அந்தப் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ருதுராஜ் அசத்துவாரா:
இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் இப்போட்டிக்காக மொத்த இந்தியாவும் காத்திருப்பதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலங்களில் இது போன்ற போட்டிகளில் தோனி தலைமையில் சென்னை வெற்றி பெற்றுள்ளதாக ராயுடு கூறியுள்ளார். ஆனால் இம்முறை தோனியின் உதவி இல்லாமல் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தத்தை சமாளித்து வெற்றி காண்பாரா என்பதை பார்க்க உள்ளதாக ராயுடு கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மே 18ஆம் தேதிக்காக நாட்டில் உள்ள அனைவரும் காத்திருக்கின்றனர். நானும் அதில் வித்தியாசமானவன் கிடையாது. அப்போட்டியில் புதிய கேப்டன் தலைமையில் சிஎஸ்கே அணி எதிரணிக்கு சவால் கொடுப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். இது போன்ற நெருக்கமான போட்டிகளில் எம்எஸ் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி நன்றாக செயல்பட்டுள்ளது”

- Advertisement -

“இம்முறை அது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தோனியின் உதவி இல்லாமல் ருதுராஜ் எப்படி அணியை வழி நடத்துகிறார் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். அதே போல ஆர்சிபி அணியும் வெற்றி காண்பதற்கு வலுவாக வருவார்கள். எனவே இப்போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்” என்று கூறினார். இந்த நிலையில் சென்னை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்கஅயர்லாந்திடம் பலத்தை காட்டிய பாகிஸ்தான்.. விராட் கோலியை முந்திய பாபர் அசாம் புதிய உலக சாதனை

மறுபுறம் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. அதனால் தற்சமயத்தில் சென்னை அணி பிளே ஆப் செல்வதற்கு 80% வாய்ப்புள்ளது. எனவே இப்போட்டியில் சென்னை அணியை கொஞ்சம் பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். இதற்கிடையே மழை வருவதற்கு காத்திருப்பதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement