15-வது மாடியில் தொங்கவிட்டாங்க! 2013இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் நடந்த கொடுமையை விளக்கும் நட்சத்திர வீரர்

Mumbai Indians MI 2013
- Advertisement -

மும்பை நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், சிம்ரோன் ஹெட்மயர் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
ராஜஸ்தானில் கலக்கும் சஹால்:
அதேபோல் பந்துவீச்சில் நியூசிலாந்தை சேர்ந்த டிரென்ட் போல்ட் மற்றும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் யுஸ்வென்ற சஹால் தனது அபார செயல்பாடுகளால் அந்த அணியின் வெற்றியில் பங்காற்றி வருகிறார். கடந்த 2013 முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வந்த அவர் அந்த அணிக்காக 119 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை எடுத்து விராட் கோலியை போல பெங்களூர் அணியின் முக்கிய முதுகெலும்பு வீரராக வலம் வந்தார்.

சொல்லப்போனால் அந்த அணிக்காக விளையாடிய பின்புதான் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற காரணத்தால் அந்த அணிக்காக மீண்டும் விளையாட அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் பல வருடங்களாக ஆற்றிய பங்கை மறந்த அந்த அணி நிர்வாகம் அவரை கழற்றிவிட்ட நிலையில் 6.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ராஜஸ்தான் வாங்கியது.

- Advertisement -

தற்போது ராஜஸ்தான் அணியில் விளையாடத் தொடங்கியுள்ள அவர் இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை எடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபித்து வருகிறார். அதிலும் தனது பழைய அணியான பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளை எடுத்ததுடன் விராட் கோலியை ரன் அவுட்டும் செய்து அபாரமாக செயல்பட்ட காரணத்தால் இவரை போய் பெங்களூரு விட்டு விட்டதே என பல ரசிகர்கள் அந்த அணியை கலாய்த்தனர்.

15 மடியில் தொங்கவிட்டாங்க:
இன்று ஐபிஎல் தொடரிலும் இந்திய அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டு நட்சத்திர வீரராக உருவாகியுள்ள யூஸ்வென்ற சஹால் முதல் முறையாக தனது ஐபிஎல் பயணத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் தொடங்கினார். 2011 – 2013 வரை அந்த அணிக்காக விளையாடிய காலகட்டத்தில் ஒரு தருணத்தின் போது மும்பை அணிக்காக விளையாடிய மற்றொரு வீரர் தன்னை விளையாட்டாக செய்கிறேன் என்ற பெயரில் அடித்து 15-வது மாடியில் தொங்க விட்டதாக பரபரப்பான தற்போது பின்னணியை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இதை பற்றி பெரும்பாலும் நான் யாரிடமும் பேசுவதில்லை. 2013 காலகட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினேன். அப்போது பெங்களூருவில் நடந்த ஒரு போட்டிக்கு பின்பு ஹோட்டலில் நாங்கள் ஒன்றாக இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் ஒரு வீரர் மிக அதிகமாக குடித்துவிட்டு நீண்ட நேரமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக வெளியே தூக்கி சென்ற அவர் பால்கனியில் தொங்க விட்டார். அவரின் பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை” என தனது அருகே அமர்ந்திருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கருண் நாயர் ஆகியோரிடம் பரிதாபமாக கூறினார்.

- Advertisement -

உயிர் தப்பித்ததே பெரிய விஷயம்:
“அதன்பின் தனது கைகளை தலைக்கு பின்புறம் வைத்து அவர் கட்டி விட்டதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த தருணத்தில் 15-வது மாடியில் தொங்கிக்கொண்டிருந்த என்னை பார்த்த ஒரு சிலர் திடீரென வந்து நல்லவேளையாக காப்பாற்றினர். அதனால் எனது சுயநினைவை இழக்கும் அளவுக்கு சென்ற நான் தண்ணீர் குடித்தேன். அன்றைய தினம் இனிமேல் எங்கு சென்றாலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்” என்று இதுபற்றி சஹால் மேலும் கூறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏனெனில் பொதுவாகவே களத்திலும் களத்திற்கு வெளியேவும் ஜாலியாக இருக்கும் ஒரு நபராக அறியப்படும் சஹால் அந்த 2013 காலகட்டத்தில் இப்போது இருப்பதை விட மிகவும் ஒல்லியாக இருந்தார். அதற்காக அவரை வைத்து விளையாட நினைத்து மும்பை அணிக்காக விளையாடிய ஒரு வீரர் இந்த அளவுக்கு மோசமாக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

அதிலும் கரணம் தப்பினால் மரணம் என்ற சூழ்நிலையில் அந்த தருணத்தில் 15-வது மாடியில் தடுமாறிக் கொண்டிருந்த தன்னை அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் பார்த்து காப்பாற்றாமல் போயிருந்தால் உயிருக்கே ஆபத்தான நிலைமைக்கு சென்றிருப்பேன் என சஹால் கூறினார். என்னதான் விளையாட்டுக்கு செய்ததாக இருந்தாலும் இந்த அளவுக்கு செய்த அந்த வீரரின் பெயர் யார் என்று வெளியிடுமாறு அவரிடம் சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேட்கின்றனர்.

இதையும் படிங்க : டெல்லியிடம் இப்படி ஒரு வீக்னெஸ் இருக்கா ! ஹாட்ரிக் வெற்றியுடன் ராகுல் தலைமையில் அசத்தும் லக்னோ

மேலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமாக இருந்துவிட்டால் மட்டும் போதாது களத்திற்கு வெளியே அணிக்குள் என்ன நடக்கிறது, வீரர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது போன்ற விஷயங்களை கவனிக்க மும்பை அணி நிர்வாகத்துக்கு நேரமில்லையா என்பது போல் மும்பை நிர்வாகத்தை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Advertisement