- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அபிமன்யு ஈஸ்வரனை இப்படி அசிங்கப்படுத்துறதுக்கு அவரை செலக்ட் பண்ணாமலே இருக்கலாம் – உத்தப்பா விளாசல்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க பல்வேறு வீரர்களும் போராடிவரும் வேளையில் ஒரு சில வீரர்கள் வருட கணக்காக போராடி வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் 29 வயதான பெங்கால் அணியை சேர்ந்த துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரன் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியில் தனது அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஆனால் இன்றளவும் அவருக்கு முதன்மை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

இப்படி அவரை ஏமாத்தாதீங்க :

இந்திய அணிக்காக கடந்த பல டெஸ்ட் தொடர்களாகவே அவர் தேர்வு செய்யப்பட்டு வந்தாலும் பிளேயிங் லெவனில் அவருக்கு இதுவரை ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. தனது 17 வயதில் முதல்தர போட்டிகளில் அறிமுகமான அவர் 12 ஆண்டுகளாக தற்போது வரை 101 போட்டியில் விளையாடி 27 சதம் மற்றும் 29 அரைசதம் என 48 ரன்கள் சராசரியுடன் 7675 ரன்களை மலைபோல் குவித்துள்ளார்.

- Advertisement -

இருந்தாலும் அவருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படாதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய ஏ அணிக்காகவும் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் துவங்கும் முன்னதாகவே ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணித்திருந்த அபிமன்யு ஈஸ்வரன் இந்திய ஏ அணிக்காக அங்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதோடு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலிலும் இடம் பிடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இடம்பெறவில்லை. அந்த வேளையில் அபிமன்யு ஈஸ்வரனை பயன்படுத்தி பார்த்திருக்கலாம்.

- Advertisement -

ஆனால் அதனை நிர்வாகம் செய்ய மறுத்தது. அதேபோன்று இத்தனை ஆண்டு காலம் அவர் சிறப்பாக விளையாடி வந்தும் அவருக்கு ஒரு வாய்ப்பை கூட இதுவரை வழங்காமல் இருப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் அவரை ஏன் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் அவர் உள்ளூர் தொடர்களில் 1000 ரன்களை குவிக்கிறார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்யாததால் தான் இந்தியா தோற்றது – உத்தப்பா விமர்சனம்

அவரை போன்ற ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் விட்டால் அவரை எதுக்கு அணியில் தேர்வு செய்ய வேண்டும்? அவருக்கு தவறான நம்பிக்கையை அளிக்காதீர்கள். இதற்கு பதிலாக அவரின் முகத்திற்கு நேராக “நீ சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டாய்”, “உள்ளூர் போட்டியில் மட்டும் ரன் குவித்து கொண்டே இரு” என்று நேரடியாக சொல்லி விடுங்கள் என்று தேர்வுக்குழுவினரை விமர்சித்து ராபின் உத்தப்பா காட்டமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -