
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது இன்று நடைபெற உள்ளது. பிரிஸ்டல் நகரில் நடைபெறயிருக்கும் இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி இரண்டு தோல்விகளை சந்தித்து விட்டதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்ற முடியும் என்கிற முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்க காத்திருக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை இங்கு காணலாம்.
அந்த வகையில் கடந்த மூன்றாவது டி20 போட்டியின் போது விளையாடிய இந்திய அணியே இன்றைய போட்டியிலும் விளையாடும் என்றும் பெரியளவில் இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடைசி
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது கடைசி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : தல தோனியை பின்னுக்கு தள்ளி 5 ஆவது இடத்தை பிடித்து அசத்திய அக்சர் படேல் – விவரம் இதோ
1) அபிஷேக் சர்மா, 2) வைபவ் சூர்யவன்ஷி, 3) இஷான் கிஷன், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) திலக் வர்மா, 6) சிவம் துபே, 7) அக்சர் படேல், 8) ஹர்ஷித் ராணா, 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) பிரின்ஸ் யாதவ்.