IND vs AUS : 13 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய – உஸ்மான் கவாஜா

Khawaja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது இன்று மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் இன்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவஜா இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக அற்புதமான சதத்தினை பதிவு செய்து அந்த அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

Khawaja 1

மேலும் அவர் இங்கு அடித்த இந்த சதத்தின் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வீரராக இந்திய மண்ணில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : கடந்த 13 ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இடதுகை ஆஸ்திரேலிய ஆட்டக்காரர் யாரும் சதம் அடிக்காமல் இருந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த போட்டியில் அவர் சதம் அடித்து அந்த சாதனையை செய்துள்ளார். கடைசியாக இந்திய மண்ணில் 2010 மற்றும் 11-ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது மார்க்கஸ் நார்த் என்கிற இடதுகை ஆஸ்திரேலிய வீரர் சதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : IND vs AUS : 10 வருசமா கூல் ட்ரிங்ஸ் தூக்குனேன், இந்திய மண்ணில் சதமடித்து இந்தியாவை சாய்க்கும் கவாஜா – உணர்ச்சி பேட்டி

அதனை தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து தற்போது உஸ்மான் கவாஜா ஒரு இடது கை ஆஸ்திரேலிய வீரராக இந்திய மண்ணில் சதத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்நாள் ஆட்டத்தில் 104 ரன்களை குவித்துள்ள கவாஜா நாளை பெரிய ரன் குவிப்பிற்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

Advertisement