IND vs AUS : 10 வருசமா கூல் ட்ரிங்ஸ் தூக்குனேன், இந்திய மண்ணில் சதமடித்து இந்தியாவை சாய்க்கும் கவாஜா – உணர்ச்சி பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட ஆஸ்திரேலியா 3வது போட்டியில் வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனலுக்கு அதன் முதல் அணியாக தகுதி பெற்றது. மறுபுறம் 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றினாலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

அப்போட்டியில் பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதை கணித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அன்னிக்கு இம்முறை உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து ஆரம்பத்திலேயே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டிராபிஸ் ஹெட் 7 பவுண்டரியுடன் 32 ரன்கள் குவித்து அஷ்வின் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேனை 3 ரன்களில் ஷமி அவுட்டாக்கிய நிலையில் அடுத்ததாக வந்து நங்கூரத்தை போடும் முயன்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை 38 ரன்களில் ரவீந்திர ஜடேஜா காலி செய்தார்.

- Advertisement -

10 வருஷம் கூல் ட்ரிங்ஸ்:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற உஸ்மான் கவஜா மிகச்சிறப்பாக செயல்பட்டு அரை சதம் கடந்த அசத்திய நிலையில் அவருக்கு கை கொடுக்க முயன்ற பீட்டர்ஹேன்ஸ்கோப் 17 ரன்களில் முகமது சமியின் வேகத்தில் கிளீன் போல்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் கடைசி மணி நேரத்தில் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு இந்தியாவுக்கு தொல்லை கொடுத்தார். மறுபுறம் அவரை விட நங்கூரமாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய உஸ்மான் கவஜா 15 பவுண்டரியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 14வது சதமடித்து 104* ரன்கள் குவித்தார்.

அவருடன் 5வது விக்கெட்டுக்கு 85* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வரும் கேமரூன் கிரீன் 49* ரன்கள் எடுத்துள்ள நிலையில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 205/4 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதல் 3 போட்டிகள் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் இரண்டரை நாட்களில் முடிந்த நிலையில் அகமதாபாத் பிட்ச் ஓரளவு பிளாட்டாக இருப்பதை பயன்படுத்தி ஆஸ்திரேலியா சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இதனால் இப்போட்டி 5 நாட்களை உறுதியாகத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் என்ன தான் பிட்ச் பிளாட்டாக இருந்தாலும் தரமான இந்திய பந்து வீச்சுக்கும் மைதானத்திற்கும் மதிப்பு கொடுத்து விளையாடி வரும் உஸ்மான் கவஜா 251 பந்துகளை எதிர்கொண்டு 41.43 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரித்தான பாணியில் மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்த தொடரில் முதல் சதமடித்த பேட்ஸ்மேனாக அசத்தியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2012/13 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் இந்திய மண்ணில் நிகழ்ந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

அப்படி கடந்த 2 தொடர்களாக 8 போட்டிகளாக 10 வருடங்களாக கூல் ட்ரிங்ஸ் தூக்கி காத்திருந்தது இப்போட்டியில் சதமடித்தது உணர்ச்சியை கொடுத்துள்ளதாக போட்டியின் முடிவில் உஸ்மான் கவாஜா பேசியது பின்வருமாறு. “கடந்த 2 இந்திய சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்திருந்த நான் அப்போது நடந்த அனைத்து 8 டெஸ்ட் போட்டிகளிலும் கூல்ட்ரிங்ஸ் தூக்கினேன்”

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸி மாதிரியே இந்தியாவும் தப்பு பண்ணிட்டாங்க, அது தான் தடுமாற காரணம் – இந்திய பேட்ஸ்மேன்களை விளாசும் கம்பீர்

“அதனால் தற்போது சதமடித்துள்ளது நிறைய உணர்ச்சியை கொடுத்துள்ளது. இது மிகவும் ஸ்பெஷலானது. மிகவும் சிறந்த இந்த பிட்ச்சில் என்னுடைய விக்கெட்டை பரிசளிக்க நான் விரும்பவில்லை. இங்கு உடலை விட மனதில் தான் அதிகம் விளையாட வேண்டியுள்ளது. இதை நீங்கள் நீண்ட நேரம் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement