என்ன தான் சொல்லுங்க.. அதுல சச்சினை விட விராட் கோலி தான் பெஸ்ட்.. கவாஜா பாராட்டு

Usman Khawaja
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் அசத்தி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றிகள் பதிவு செய்துள்ளது. இத்தொடரில் பேட்டிங் துறையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2/3 என இந்தியா சரிந்து தடுமாறிய போது மீண்டும் அழுத்தமான சூழ்நிலையில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 85 ரன்கள் குவித்து ராகுலுடன் இணைந்து வெற்றி பெற வைத்தார். அதனால் இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையிலே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49) உலக சாதனையை சமன் செய்வார் அல்லது முறியடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியிருந்தார்.

- Advertisement -

கவாஜா பாராட்டு:
மேலும் ஏற்கனவே சச்சினை மிஞ்சி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்பது போன்ற நிறைய சாதனைகளை விராட் கோலி படைத்து வருகிறார். ஆனாலும் மிகவும் கடினமான விதிமுறைகளை கொண்ட 90களில் இப்போது விட தரமான தரமான பவுலர்களை எதிர்கொண்ட சச்சின் தான் விராட் கோலியை விட சிறந்தவர் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் தம்மை பொறுத்த வரை சிறந்தவர் என்று ஆஸ்திரேலியா பாராட்டியிள்ளார். இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்று நான் சொல்வேன். ஏனெனில் புள்ளி விவரங்களை நீங்கள் பார்த்தால் இப்போதே அவர் கிட்டத்தட்ட சச்சினுக்கு நிகரான சதங்களை குறைந்த போட்டிகளிலேயே அடித்துள்ளார்”

- Advertisement -

“இருப்பினும் நான் வளரும் போது சச்சின் தான் எங்களுடைய பெஞ்ச் மார்க்காக இருந்தார். ஆனால் விராட் கோலி தற்போது செய்வதை ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன் வேறு யாரும் செய்ததில்லை. அவர் தன்னை சுற்றியுள்ள வீரர்களும் முன்னேறுவதில் முக்கிய பங்காற்றுகிறார். அதனால் அவருடன் விளையாட அனைவரும் விரும்புகின்றனர். மேலும் அவர் போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறமையைக் கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: அன்று 12.2 எக்கனாமி.. கண்கலங்க வைத்த இங்கிலாந்தை.. இன்று இந்திய மண்ணில் பழி தீர்த்த ரசித் கான்

“அதை விட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மகத்தான சேசிங் செய்பவராக இருக்கிறார். அவரை பொறுத்த வரை கன்சிஸ்டென்சி எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக நீண்ட காலமாக தொடர்ந்து அசத்தி வரும் அவர் 2 மற்றும் 4 ரன்களை அடிப்பதில் சிறந்தவராக இருக்கிறார். மேலும் அதிக சிக்ஸர்கள் அடிக்காமலேயே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்துகிறார்” என்று கூறினார்.

Advertisement