அன்று 12.2 எக்கனாமி.. கண்கலங்க வைத்த இங்கிலாந்தை.. இன்று இந்திய மண்ணில் பழி தீர்த்த ரசித் கான்

Rashid Khan vs ENGLAND
- Advertisement -

விறுவிறுப்பான தருணங்களுடன் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 284 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ரஹ்மத்துல்லா குபாஸ் 70 ரன்களும் இக்ரம் கில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 285 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, கேப்டன் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆரம்ப முதலே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரசித் கானின் பதிலடி:
அதனால் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தும் 40.3 ஓவரிலேயே இங்கிலாந்தை 215 ரன்களுக்கு சுருட்டி வென்ற ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரஹ்மான், ரசித் கான் ஆகியோர் தாலா 3 விக்கெட்டுகளும் முகமது நபி 2 விக்கெட்டுகளும் சாய்ந்தனர். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது.

முன்னதாக என்னதான் ஆப்கானிஸ்தான் கத்துக் குட்டியாக பார்க்கப்பட்டாலும் அந்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரசித் கான் கடந்த பல வருடங்களாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலக அளவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நம்பர் ஒன் ஸ்பின்னராக அனைவராலும் போற்றப்படுகிறார். இருப்பினும் கடந்து 2019 உலகக்கோப்பையில் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 397 ரன்கள் குவித்து பின்னர் 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

குறிப்பாக அப்போட்டியில் கேப்டன் இயன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஃபிளாட்டான பிட்ச்சில் ரசித் கானை கண் கலங்கும் அளவுக்கு சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். அதனால் 9 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காத ரசித் கான் 110 ரன்களை 12.22 என்ற படுமோசமான எக்கனாமியில் வாரி வழங்கி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்த வீரராக மோசமான உலக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: ரன்ரேட்டை ஏத்துங்க.. போட்டிக்கு முன்பே கலாய்த்த மைக்கேல் வாகன்.. முகத்தில் கரியை பூசிய ஆப்கானிஸ்தான்

அந்த நிலையில் இப்போட்டியில் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்டிருந்த டெல்லி மைதானத்தில் தனது முன்னேறிய திறமைகளை பிரயோகித்த அவர் 9.3 ஓவரில் 1 மெய்டன் உட்பட 37 ரன்களை 3.89 என்ற எக்கனாமியில் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்து வரலாற்றுத் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய பங்காற்றி இங்கிலாந்தை பழிக்கு பழி தீர்த்ததாக ரசிகர்கள்பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் வீழ்வதாலும் மீண்டும் எழுந்து பதிலடி கொடுக்கும் சாம்பியன் வீரராக ரசித் கான் தன்னை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement