ரன்ரேட்டை ஏத்துங்க.. கத்துக்குட்டியென குறைத்து எடைபோட்ட மைக்கேல் வாகன்.. முகத்தில் கரியை பூசிய ஆப்கானிஸ்தான்

Micheal Vaughan
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தலைநகர் டெல்லி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி 284 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ரஹமதுல்லா குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் கில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 3 விக்கெட்களை சாய்த்தார். ஆனால் 285 ரன்கள் துரத்திய இங்கிலாந்து ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தானின் தரமான சுழல் பந்து வீச்சில் 40.3 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கலாய்த்த வாகன்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ஹரி ப்ரூக் 66 ரன்கள் எடுக்க பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிப் உர் ரஹ்மான், ரசித் கான் தலா 2 விக்கெட்டுகளும் முகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதனால் உலகக்கோப்பையில் 14 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் அசத்தியது.

அதைவிட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து முதல் முறையாக வலுவான இங்கிலாந்துக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சரித்திரம் படைத்தது. அதன் காரணமாக 3 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து செமி ஃபைனலுக்கு சென்று கோப்பையை தக்க வைக்க அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

- Advertisement -

முன்னதாக நட்சத்திர வீரர்களை கொண்ட தங்களது அணியை விட ஆப்கானிஸ்தான் கத்துக்குட்டியாக கருதப்படுவதால் இங்கிலாந்து எளிதாக வெல்லும் என்று இப்போட்டி தூங்குவதற்கு முன்பாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். குறிப்பாக முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்ததால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கி ரன்ரேட்டை அதிகரிக்க இங்கிலாந்துக்கு இது நல்ல வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: ரன்ரேட்டை ஏத்துங்க.. போட்டிக்கு முன்பே கலாய்த்த மைக்கேல் வாகன்.. முகத்தில் கரியை பூசிய ஆப்கானிஸ்தான்

“இது ஆப்கானிஸ்தானுக்கு அவமரியாதை இல்லை. ஆனால் இங்கிலாந்து தன்னுடைய ரன் ரேட்டை மேம்படுத்த இது நல்ல வாய்ப்பு” என்று கூறியிருந்தார். ஆனால் கடைசியில் களத்தில் மந்தமாக செயல்பட்ட இங்கிலாந்துக்கு முழு எனர்ஜியுடன் விளையாடி வரலாற்று தோல்வியை பரிசளித்துள்ள ஆப்கானிஸ்தான் மைக்கேல் வாகன் முகத்தில் கரியை பூசியுள்ளது என்றே சொல்லலாம். அதனால் தற்போது அவரை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் ட்விட்டரில் தேடி சென்று கிண்டலடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement