அதை சரியா செஞ்சா.. குழந்தைங்க மாதிரி பாகிஸ்தானை அடிச்ச இந்தியாவுக்கு தான் கப்.. வாழ்த்திய அக்தர்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் அனைத்து துறைகளிலும் அட்டகாசம் செய்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

முன்னதாக 1992 முதல் இதுவரை உலக கோப்பைகளில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இம்முறை இந்தியாவை அவருடைய சொந்த மண்ணில் தோற்கடித்து நிறுத்துவோம் என்று கேப்டன் பாபர் அசாம் முதல் சோயப் அக்தர் வரை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆரம்பத்திலேயே பேசினார்கள். ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல் களத்தில் கில்லியாக செயல்பட்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டி அதை 117 பந்துகள் மீதம் வைத்து மிரட்டலாக சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

வாழ்த்திய அக்தர்:
அந்த வகையில் 2023 ஆசிய கோப்பையில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அடித்து நொறுக்கியதை போலவே இப்போட்டியிலும் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றியை பதிவு செய்து தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது. அதனால் சவால் விட்ட சோயப் அக்தர் ஏற்கனவே பாகிஸ்தானின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் பேட்டி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா ஒன்றும் தெரியாத குழந்தைகளை போல் பாகிஸ்தானை அடித்து நொறுக்கியதாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இருப்பினும் வேகத்தில் இதை விட சவால் மிகுந்த போட்டியான செமி ஃபைனலில் வென்றால் நிச்சயமாக சொந்த மண்ணில் நடைபெறும் ஃபைனலிலும் வென்று 2011 போல இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியும் என்று வாழ்த்தும் வகையில் பேசியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது நான் 2011 உலகக்கோப்பை வரலாற்றை மீண்டும் இந்தியா நிகழ்த்தும் என்று நம்பத் துவங்கியுள்ளேன். ஒருவேளை செமி ஃபைனலில் மட்டும் சொதப்பாமல் இருந்தால் நிச்சயமாக இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்லும். ஏனெனில் நீங்கள் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள் இந்தியா நீங்கள் எங்களை அடித்து நொறுக்கினீர்கள். குறிப்பாக பாகிஸ்தானை குழந்தைகளைப் போல் இந்தியா தோற்கடித்துள்ளது”

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி படைத்த மோசமான சாதனை – நடப்பு சம்பியனுக்கு இப்படி ஒரு நிலையா?

“பாகிஸ்தான் அணியிடமிருந்து மிகவும் ஏமாற்றமான செயல்பாடுகளை பார்த்தோம். அதிலும் ரோஹித் சர்மா முழுமையான பேட்ஸ்மேனை போல் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் பவுலிங் அட்டாக்கை அடித்து நொறுக்கும் வகையில் விளையாடினார்” என்று கூறினார். அப்படி ஆரம்பத்திலேயே 3 வெற்றிகளை பெற்றுள்ளதால் இந்தியா செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை இப்போதே பிரகாசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement