ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி படைத்த மோசமான சாதனை – நடப்பு சம்பியனுக்கு இப்படி ஒரு நிலையா?

ENG
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த லீக் சுற்று போட்டிகளில் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதனால் ஒவ்வொரு போட்டியுமே அனைத்து அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு இந்த தொடர் தற்போது சற்று மோசமாகவே ஆரம்பித்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணியானது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடமும், மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இடமும் தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணியானது மூன்று போட்டியில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 5-ஆவது இடத்தை பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்ற முடிந்த 13-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணியானது 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் மட்டுமே அடித்தது.

- Advertisement -

பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்ததோடு இந்த உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியலிலும் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : நாட்டுக்காக விளையாடாம அதுக்காக ஆடுனா தோல்வி தான் கிடைக்கும்.. பாபர் அசாமை ஓப்பனாக விமர்சித்த கம்பீர்

இந்நிலையில் நேற்று அவர்கள் அடைந்த தோல்வியின் மூலம் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான சாதனைக்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில் இதுவரை சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 11 அணிகளிடமும் தோல்வியை சந்தித்த ஒரே அணி என்கிற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement