
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் அணியான சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் பத்தாம் இடத்தை பிடித்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறியிருந்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. இந்த தொடர் தோல்விகள் ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
அதன்பின்னர் அவர் காயம் காரணமாக பாதி தொடரிலேயே வெளியேறிய வேளையில் மீண்டும் தோனி கேப்டனாக வந்த பிறகும் சென்னை அணியால் வெற்றி பாதைக்கு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக இந்த தொடரின் பாதியிலிருந்தே சென்னை அணியில் பல்வேறு மாற்றங்கள் இருந்தது. அதுமட்டுமன்றி அதிகளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் சிஎஸ்கே அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் பட்டேல் மூன்று போட்டிகளில் விளையாடி 212 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 68 எண்களை குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக அவர் விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டியில் சென்னை அணி வெற்றியும் பெற்றுயிருந்தது. இதன் காரணமாக எதிர்வரும் சீசன்களில் உர்வில் பட்டேல் சென்னை அணியின் முக்கிய வீரராக விளையாடுவார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்த 2025 ஐபிஎல் தொடரின் போது தனது தந்தையை எவ்வாறு சேப்பாக்கம் மைதானத்திற்கு போட்டியை காண நேரில் அழைத்து வந்தேன்? என்பது குறித்த சுவாரசிய தகவலை தற்போது உர்வில் படேல் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது :
நான் முதன் முதலில் சென்னைக்கு அழைக்கும் போது என் தந்தை நேரில் வர தயக்கம் காட்டினார். ஆனால் அப்போது நான் நீங்கள் ஒருமுறை வந்து தோனியை சந்தித்து விட வேண்டும். தோனியை பார்ப்பதற்காக நேரில் வாருங்கள் என்று கூறினேன். அவரும் என்னுடைய போட்டியை நேரில் காண்பதை விட தோனியை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்திற்காகவே நேரில் வந்தார். அப்போது காசி விஸ்வநாதன் சாரும் அருகில் இருந்தார்.
இதையும் படிங்க : நிதீஷை தூக்கிட்டு அவரை சேருங்க.. அவரோட பவுலிங்கை இங்கி வீரர்கள் அடிக்கிறது கஷ்டம் – ஹர்பஜன் சிங் கருத்து
அவரே எனது தந்தையை அழைத்துச் சென்று அனைத்து வீரர்களிடமும் அறிமுகம் செய்தார். அதன்பின்னர் தோனியை ஹோட்டல் அறையில் சென்று நான் என் குடும்பத்துடன் சந்தித்தேன். அந்த ஒரு தருணம் என் வாழ்க்கையில் ஸ்பெஷலான தருணம் என உர்வில் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.