நிதீஷை தூக்கிட்டு அவரை சேருங்க.. அவரோட பவுலிங்கை இங்கி வீரர்கள் அடிக்கிறது கஷ்டம் – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan and Nitish
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதன் மூலம் தற்போது இந்த தொடரில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நிதீஷ் ரெட்டி இடத்தில் அவரை சேருங்க : ஹர்பஜன் சிங் கருத்து

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? என்று குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் மாற்றங்கள் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் நிதீஷ் ரெட்டியை நீக்கிவிட்டு அவரது இடத்தில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே இந்த கருத்தினை கூறியிருந்தேன். அதாவது பர்மிங்ஹாம் போட்டியிலிருந்தே குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில் இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்ளும் இங்கிலாந்து வீரர்கள் மிக வேகமாக ரன்களை குவிக்கின்றனர்.

- Advertisement -

அதனால் குல்தீப் யாதவ் போன்ற மிஸ்டரி சுழற்பந்து வீச்சாளர் இருந்திருந்தால் நிச்சயம் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றி ரன் குவிப்பின் தடுத்து நிறுத்தி இருப்பார். அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் விழ புதுப்பந்திற்காக இந்திய அணி காத்திருக்கும் தேவையின்றி மிடில் ஓவர்களிலும் விக்கெட் வீழ்த்தும் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும். ஒருவேளை இந்திய அணி என்னுடைய அணியாக இருந்தால் நிச்சயம் நான் நிதீஷ் ரெட்டியை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை விளையாட வைத்திருப்பேன் என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : காயமடைந்துள்ள அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்.. 4 ஆவது டெஸ்டில் ஆடப்போகும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் யார்? – விவரம் இதோ

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சின் போது 30 ரன்களை குவித்த நிதீஷ் ரெட்டி இரண்டாவது இன்னிங்ஸின்போது இந்திய அணி 193 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய வேளையில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement