இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கியுள்ளது.
4 ஆவது போட்டியில் விளையாடப்போகும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் யார்? :
இதன் காரணமாக எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் என்கிற நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் அடைந்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அந்த வகையில் அர்ஷ்தீப் சிங்குகக்கு கையில் ஏற்பட்டுள்ள விட்டு காயம் காரணமாக தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு ஆகாஷ் தீப்பிற்கு இடுப்பு பகுதியில் தசைப்பிரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. அதன் காரணமாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அன்சுல் கம்போஜ் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அடுத்ததாக நடைபெறவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இவர்களது காயம் காரணமாக எந்த 3 வேகமப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் பார்க்கையில் : பும்ரா கடைசி இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் தான் விளையாடுவார் என்று கூறப்பட்டாலும் இவர்கள் இருவரது காயம் காரணமாக அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இன்னும் 5 விக்கெட் போதும்.. வாசிம் அக்ரமின் மாபெரும் சாதனையை முடியடிக்க காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா
அவரை தவிர்த்து முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரே 3 வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணி சார்பாக விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அன்ஷுல் கம்போஜ் இந்திய டெஸ்ட் அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இணைந்திருந்தாலும் அவருக்கு இந்த போட்டியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிகிறது.



