இன்னும் 5 விக்கெட் போதும்.. வாசிம் அக்ரமின் மாபெரும் சாதனையை முடியடிக்க காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா

Akram and Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்ட வேளையில் முதல் மூன்று போட்டிகளிலேயே 2 ஆட்டங்களில் அவர் விளையாடிவிட்டார்.

வாசிம் அக்ரமின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா :

அந்த வகையில் அவர் விளையாடி உள்ள இந்த இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது லீட்ஸ் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது லார்ட்ஸ் மைதானத்திலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக இஷாந்த் சர்மா 14 போட்டியில் விளையாடி 48 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இவ்வேளையில் பும்ரா வெறும் 10 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை எடுத்து அவரை மிஞ்சியிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் நான்காவது போட்டியில் அவர் விளையாடுவது முக்கியம் என்று பார்க்கப்படும் வேளையில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாகவில்லை. ஒருவேளை அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பட்சத்தில் முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரமின் மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பவுலராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வாசிம் அக்ரம் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து மண்ணில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் அக்ரம் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : சுப்மன் கில் அதுல கவனம் செலுத்தி மான்செஸ்டரில் மெஷினா ஓடுவாரு.. இந்தியா யாரையும் நம்பியில்ல.. சஞ்சய் மஞ்ரேக்கர்

அதேவேளையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் மேலும் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement