ஆசியக்கோப்பை : அணியில் இடம்பெறாத அன்லக்கி பெஸ்ட் பிளேயிங் லெவன் 11 – லிஸ்ட் இதோ

Dhawan
- Advertisement -

எதிர்வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் என ஆறு அணிகள் பங்கேற்று ஆசியகோப்பை டிராபிக்கான பலப்பரீட்ச்சையை நடத்த இருக்கின்றன.

Asia-Cup

- Advertisement -

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் இந்திய அணி கடைசியாக கடந்து சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை அறிவித்தது.

தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொண்ட மீட்டிங்-க்கு பிறகு அதிகாரபூர்வமாக வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அந்த அணியில் பல வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும், சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் இருந்தது.

Shikhar-Dhawan

ஆனாலும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த அணித்தேர்வில் உள்ள குறைகள் குறித்த பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறும் தகுதி இருந்தும் அணியில் இடம் கிடைக்காத அன்லக்கி வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

- Advertisement -

அப்படி இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாமல் போன பெஸ்ட் 11 வீரர்களை வைத்து அன்லக்கி பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி இந்திய அணி தவறவிட்ட வீரர்களின் பெஸ்ட் 11 இந்திய அணி இதோ :

இதையும் படிங்க : IND vs IRE : மேட்சுக்காக காத்திருந்து இப்படி நடக்கும்போது கஷ்டமா இருக்கு – ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி

1) ஷிகார் தவான், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) சஞ்சு சாம்சன், 4) ரிஷப் பண்ட், 5) ரிங்கு சிங், 6) வாஷிங்க்டன் சுந்தர், 7) ரவிச்சந்திரன் அஷ்வின், 8) முகேஷ் குமார், 9) அர்ஷ்தீப் சிங், 10) உம்ரான் மாலிக், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement