IND vs IRE : மேட்சுக்காக காத்திருந்து இப்படி நடக்கும்போது கஷ்டமா இருக்கு – ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று டப்ளின் நகரில் நடைபெற இருந்தது. இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் எப்போது போட்டி துவங்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

IND-vs-IRE

- Advertisement -

ஆனால் இரவு 10:30 மணி வரை நிற்காமல் பெய்தது. அதன்பிறகு மழை ஓய்திருந்தாலும் மைதானத்தில் நீர்த்தேக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக மீண்டும் மைதானத்தை தயார் படுத்த முடியாது என்பதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்த வேளையில் தற்போது பும்ரா தலைமையிலான இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

Rain 2

இந்நிலையில் இந்த தொடரில் காயத்திலிருந்து மீண்டு வந்து இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய பும்ரா இந்த தொடர் குறித்து கூறுகையில் : மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியின் போது ஆட்டம் எப்படியாவது நடக்கும் என்று காத்திருந்தேன்.

- Advertisement -

ஆனால் மழையால் இந்த போட்டி நடக்காமல் போனதில் சற்று வருத்தமாகவே உள்ளது. காலையில் இங்கு வானிலை நன்றாக இருந்தது ஆனால் மாலையில் மழை பெய்து அனைத்தும் வீணாகிவிட்டது. இந்திய அணியை தலைமை தாங்கி வழி நடத்தியதில் மிகவும் மகிழ்ச்சி எப்போதெல்லாம் இந்திய அணியை தலைமை தாங்கும் பொறுப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதனை நான் விரும்பி செய்கிறேன்.

இதையும் படிங்க : உலக கோப்பை 2023 : பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியிட்ட ஐசிசி – இந்தியாவின் போட்டிகள் எப்போது? விவரம் இதோ

அதோடு ஒரு வீரராகவும் பொறுப்பினை எடுத்து விளையாட வேண்டியது அவசியம். நமது அணியில் தற்போது உள்ள வீரர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதால் என்னுடைய வேலையும் எளிதாகிறது என பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement