2024 டி20 உ.கோ அணியில் இருக்க வேண்டிய அவரை.. ஏன் கழற்றி விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

Aakash Chopra 6
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வேலைகளை துவங்கியுள்ளது. அதற்காக ஃபைனலில் தோல்வியை கொடுத்த அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது.

முன்னதாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு அத்தொடரில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொடரிலும் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரிலும் ஜம்மு காஷ்மீர் சேர்ந்த அதிரடி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம் பெறவில்லை.

- Advertisement -

திடீர்னு காணல:
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அவர் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பறக்கவிட்டு 2022 சீசனில் அனைவரது பாராட்டுகளை பெற்று சிறப்பாக செயல்பட்டார். அதனால் இந்திய அணிக்காகவும் அறிமுகமான அவர் வேகத்தை மட்டுமே நம்பி நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றாததால் ரன்களை வாரி வழங்கி 2 போட்டியுடன் கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் தம்முடைய 2வது வாய்ப்பில் குறைந்த ரன்களை கொடுத்து நிறைய விக்கெட்களை எடுத்து அசத்தினார். ஆனாலும் 2023 ஐபிஎல் தொடரில் மீண்டும் ரன்களை வாரி வழங்கியதன் காரணமாக தற்போது உம்ரான் மாலிக் கழற்றி விடப்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 2வது தர அணியில் முதன்மை பவுலராக விளையாடிய உம்ரான் மாலிக் தற்போது திடீரென்று இந்தியா ஏ அணியில் கூட இடம் பெறாத அளவுக்கு கழற்றி விடப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் 2024 டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: கெயில் 84 ரன்ஸ் போராட்டம் வீண்.. வயசானாலும் மாறாத ஸ்டைல்.. நாக் அவுட்டில் அசத்திய கம்பீர்

“சற்று காலங்கள் முன்பு வரை அவரை நீங்கள் அணியில் வைத்திருந்தீர்கள். அதன் பின் அவரை காணவில்லை. ஒருவரை விரும்பி வைத்திருந்த நீங்கள் திடீரென்று இப்படி கழற்றி விடுவது நல்ல செயலாக தெரியவில்லை. எனவே குறைந்தபட்சம் அவரை உத்தேச அணியிலாவது வைத்திருங்கள். சொல்லப்போனால் இந்தியா ஏ அணியில் கூட தற்போது அவர் தேர்வு செய்யப்படவில்லை. 3 மாதங்கள் முன்பாக இந்திய அணியில் இருந்த அவர் தற்போது இந்திய ஏ அணியில் கூட இடம் பெறவில்லை என்பது எப்படி சாத்தியமாக முடியும்” என்று கூறினார்.

Advertisement