கெயில் 84 ரன்ஸ் போராட்டம் வீண்.. வயசானாலும் மாறாத ஸ்டைல்.. நாக் அவுட்டில் அசத்திய கம்பீர்

Gambhir Gayle LLC
- Advertisement -

ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேபிட்டல்ஸ் அணிகள் ஃபைனலுக்கு செல்லும் கடைசியில் வாய்ப்பைப் பிடிப்பதற்காக போட்டியிட்டன.

சூரத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 223/8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு கௌதம் கம்பீருடன் சேர்ந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கிர்க் எட்வர்ட்ஸ் 26 (20) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அசத்திய கம்பீர்:
அந்த நிலைமையில் வந்த நட்சத்திர இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தம்முடைய பங்கிற்கு 3 சிக்சர்களை அதிரடியாக பறக்க விட்டு 26 (15) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர் 7 பவுண்டரி 1 சிகிஸ்ருடன் 51 (30) ரன்கள் குவித்து தன்னுடைய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டானார்.

குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் 97 ரன்கள் குவித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது. அதே போலவே இந்த நாக் அவுட் போட்டியில் வயசானாலும் ஸ்டைல் மாறாததை போல் அட்டகாசமாக விளையாடிய அவர் கொடுத்த துவக்கத்தை வீணடிக்காமல் அதன் பின் வந்த ரோவ்மன் போவல் 28 (22) பென் டன்ங் 30 (10) சிப்லி 35 (16) அஸ்லே நர்ஸ் 12* (5) ரன்களை அதிரடியாக எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

குஜராத் சார்பில் அதிகபட்சமாக எம்ரித் மற்றும் ரஜத் பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 224 ரன்களை துரத்திய குஜராத் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் 44 வயதானாலும் தம்முடைய ஸ்டைல் மாறாமல் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 (55) ரன்கள் குவித்து போராடி 18வது ஓவரில் அவுட்டானார்.

இதையும் படிங்க: நீங்க பாகிஸ்தான் ப்ளேயர்.. அதை மறந்துடாதீங்க.. பாபர் அசாம் காமெடி செயலை கலாய்க்கும் ரசிகர்கள்

ஆனால் அவரைத் தவிர்த்து ஜாக் கேலிஸ் 11, ரிச்சர்ட் லெவி 17, அபிஷேக் 13, பார்திவ் படேல் 1 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கடைசியில் கெவின் ஓ’ப்ராயன் 57 (33) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் குஜராத் 211/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேபிட்டல்ஸ் சார்பில் அதிகபட்சமாக ஈஸ்வர் பாண்டே மற்றும் ரஸ்தி தேரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் குஜராத்தை வெளியேற்றி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா கேப்பிட்டல் நாளை நடைபெறும் குவாலிபர் 2 போட்டியில் மணிபால் டைகர்ஸ் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

Advertisement