நீங்க பாகிஸ்தான் ப்ளேயர்.. அதை மறந்துடாதீங்க.. பாபர் அசாம் காமெடி செயலை கலாய்க்கும் ரசிகர்கள்

Babar Azam Ball
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு பின் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் தோல்வி சந்தித்தாலும் இத்தொடரில் பட் கமின்ஸ் தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

மேலும் 1995க்குப்பின் தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்ததில்லை. எனவே உலக டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா இத்தொடரிலும் பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்து வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாபரின் காமெடி செயல்:
மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்து ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்துள்ளது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இத்தொடரில் ஷான் மசூட் பாகிஸ்தானின் புதிய கேப்டனாக செயல்பட உள்ளார்.

அந்த நிலைமையில் இத்தொடருக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. கான்பெரா நகரில் டிசம்பர் 6ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 324/6 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 38, பாபர் அசாம் 40, சர்பராஸ் அகமது 41 ரன்கள் எடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் சான் மசூட் சதமடித்து 156* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் வெப்ஸ்டர் வீசிய 37வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட ஷான் மசூட் நேராக பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை எதிர்புறம் பேட்ஸ்மேனாக நின்று கொண்டிருந்த பாபர் அசாம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென தம்முடைய அருகில் வந்த பந்தை பவுண்டரிக்கு செல்ல விடாமல் குனிந்து தடுத்து விட்டார்.

இதையும் படிங்க: நீங்க பாகிஸ்தான் ப்ளேயர்.. அதை மறந்துடாதீங்க.. பாபர் அசாம் செயலை கலாய்க்கும் ரசிகர்கள்

குறிப்பாக ஒரு கையில் பேட்டை வைத்திருந்த அவர் மற்றொரு கையில் கிளவுஸை கூட கழற்றாமல் ஆஸ்திரேலியாவின் ஃபீல்டர் போல கடமை உணர்ச்சியுடன் பவுண்டரிக்கு செல்ல வேண்டிய பந்தை தடுத்தது பாகிஸ்தான் ரசிகர்களுக்கே ஆச்சரியமாக அமைந்தது. அதனால் “விட்டால் நீங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவீர்கள்” போல என்று அவரை இதர அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement