- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அர்ஷ்தீப் பாஸ் ஆகிவிட்டார், ஆனால் உம்ரான் மாலிக் இன்னும் தயாராகவில்லை – முன்னாள் வீரர் கருத்து

கிரிக்கெட்டில் பந்துவீச்சு துறையில் சுழல் பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள் வேலை சற்று கடினமானதாகும். ஏனெனில் முழுமூச்சுடன் வேகமாக ஓடிஓடி வந்து பந்துவீசும் அவர்களை பேட்ஸ்மேன்கள் அசால்டாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க விடுவார்கள். எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசினால் ரன்களை வாரி வழங்கி வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும் நிலைமை ஏற்படும். மாறாக நல்ல லைன், லென்த் போன்ற விவேகமான யுக்திகளுடன் பந்து வீசினால் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்பதுடன் காயத்தில் இருந்தும் தப்பி நீண்டகாலம் விளையாட முடியும். இந்த கூற்றுக்கு ஐபிஎல் 2022 தொடரில் அசத்திய உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகிய 2 இளம் வீரர்கள் சான்றாகத் திகழ்கின்றனர்.

ஆம் 2018 அண்டர்-19 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட துவங்கிய அர்ஷிதீப் சிங் 10.90, 8.77, 8.27 என்ற எக்கனாமியில் கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாக பந்து வீசத்தொடங்கினார். அதனால் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட அவர் 2022 சீசனில் முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 10 விக்கெட்டுகளை 7.70 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்து அசத்தினார். அதுவும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அடிக்க துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் ரபாடா போன்றவர்களை காட்டிலும் அற்புதமாக பந்து வீசிய அவரை இந்தியாவுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

- Advertisement -

விவேகமற்ற வேகம்:
மறுபுறம் 2021 ஐபிஎல் தொடரில் நடராஜன் காயமடைந்ததால் ஒருசில போட்டிகளில் வாய்ப்பு பெற்று மிரட்டலான வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக் 2022 சீசனில் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு முழுமையாக பங்கேற்ற 14 போட்டிகளில் 22 விக்கெட்களை எடுத்தாலும் 9.03 என்ற அதிகப்படியான எக்கனாமியில் பந்து வீசினார். இருப்பினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அசால்டாக 150 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பறக்கவிட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய (157 கி.மீ) இந்திய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார்.

அந்த அளவுக்கு வேகமாக பந்து வீசும் ஒருவர் இந்திய அணியில் இல்லாத காரணத்தால் நேரடியாக டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யவேண்டும் என்ற வலுவான கோரிக்கையை சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி போன்றவர்கள் வைத்தனர். ஆனால் வேகத்திற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கிய இவர் ஒருசில வருடங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படாமல் அவசரப்பட்டு தேர்வு செய்துவிட வேண்டாம் என்று கபில் தேவ் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

சொதப்பிய உம்ரான்:
அந்த நிலைமையில் ஐபிஎல் முடிந்ததும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் அயர்லாந்தில் நடந்த டி20 தொடரில் உலகமே கேட்டுக் கொண்டிருந்த உம்ரான் மாலிக்க்கு ஒருவழியாக வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் ரன்களை வாரி வழங்கிய அவர் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 50க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கி விவேகமற்ற வேகத்தில் எந்த பயனுமில்லை என்று நிரூபித்தார்.

அத்துடன் அவசரப்பட்டு இவருக்கு வாய்ப்பளித்து விட்டோமோ என்று தேர்வு குழுவினர் யோசிக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்டார். மறுபுறம் கொண்டாடப்படாத திறமையாக பெஞ்சில் காத்திருந்த அர்ஷிதீப் சிங் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் அறிமுகமாகி வெறும் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை 5.14 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்து வேகத்தைவிட விவேகமே சிறந்தது என்று நிரூபித்துள்ளார்.

- Advertisement -

இன்னும் தயாராகவில்லை:
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இன்னும் உம்ரான் மாலிக் தயாராகவில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அர்ஷிதீப் சிங் உலக அரங்கில் செயல்பட தகுதியானவராக தேர்ச்சி பெற்றுள்ளார் என்று பாராட்டியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மற்றவர்களிடம் இல்லாத வேகம் எனும் ஆயுதம் உம்ரான் மாலிக்கிடம் உள்ளது. லைன், லென்த், யார்கர் போன்ற யுக்திகளை போல் அதை மற்றவர்களுக்கு நீங்கள் கற்றுத்தர முடியாது”

“வேகப்பந்து வீச்சாளர் அல்லது மித வேகப்பந்து வீச்சாளர் என்பது இயற்கையிலேயே பிறப்பிலேயே கிடைக்கக்கூடியது. அந்த வகையில் அவர் வேகப்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகவில்லை. இன்னும் அவர் நிறைய கிரிக்கெட் விளையாடவில்லை என்பதே அதற்கான எளிமையான காரணமாகும். அவருக்கு இன்னும் நேரங்கள் தேவைப்படுகிறது”.

இதையும் படிங்க : இங்கிலாந்து நாடாளுமன்றத்தியில் சௌரவ் கங்குலிக்கு அளிக்கப்பிட்ட மிக்பெரிய கெளரவம் – எதற்குனு பாருங்க?

“தொடர்ச்சியாக விளையாடும் அர்ஷிதீப் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகியுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் யார்கர் பந்துகளில் மிரட்டுகிறார். அவரிடம் வேகமில்லை என்றாலும் விவேகம் உள்ளது. அந்த அனுபவமே போதும். எனவே என்னைப் பொறுத்தவரை உம்ரான் மாலிக்குடன் ஒப்பிடும் போது அர்ஷிதீப் சிங் ஒரு முழுமையான பந்துவீச்சாளர் என்று கூறுவேன்” என பேசினார்.

- Advertisement -
Published by