இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சௌரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்ட மிக்பெரிய கெளரவம் – எதற்குனு பாருங்க?

Ganguly-2
- Advertisement -

கிரிக்கெட்டில் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் வெல்வதை விட வலுவான எதிரணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றிவாகை சூடுவதே வெற்றி எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தமாகும். அந்த வகையில் 2000-ஆம் ஆண்டு வாக்கில் சூதாட்ட புகாரில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், எம்எஸ் தோனி உட்பட ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது அதிரடியான கேப்டன்ஷிப் முடிவுகளால் ஒரே வருடத்தில் இந்தியாவை வெற்றி நடைபோடும் அணியாக மாற்றிக் காட்டினார். அவரது தலைமையில் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் வெளிநாடுகளில் வெல்லும் வித்தையை இந்தியா கற்றது.

அதற்கு சிறந்த உதாரணமாக கடந்த 2002இல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இந்தியா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு நாட்-வெஸ்ட் ஒருநாள் தொடரை கூறலாம். அத்தொடரில் லீக் சுற்றில் அசத்திய இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா எதிர்கொண்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மார்கஸ் ட்ரெஸ்கோதிக் 109 (100) கேப்டன் நாசர் ஹுசைன் 115 (128) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அபாரமாக செயல்பட்டு 325/5 ரன்கள் குவித்தது.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
அதை துரத்திய இந்தியாவுக்கு வீரேந்திர சேவாக் 45 ரன்கள் கேப்டன் சௌரவ் கங்குலி 60 ரன்கள் குவித்து 106 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த சச்சின் டெண்டுல்கர் 14, ராகுல் டிராவிட் 5, தினேஷ் மோங்கியா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 146/5 என மொத்தமாகத் சறுக்கிய இந்தியாவின் தோல்வி உறுதியானது. ஆனால் அந்த இக்கட்டான நிலைமையில் ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் முகமது கைப் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மனம் தளராமல் அபாரமாக போராடி 6-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினர்.

அதில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் அடித்த யுவராஜ் சிங் 69 (63) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் பயமறியாத காளையாக சீறிப்பாய்ந்த முகமது கைஃப் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 87* (75) ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார். அதனால் வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தை இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

- Advertisement -

கங்குலியின் பதிலடி:
அந்த வெற்றி வெளிநாடுகளிலும் கடினமான சூழ்நிலைகளிலும் நம்மால் வெற்றிபெற முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை முதல் முறையாக ஏற்படுத்தி இந்திய கிரிக்கெட்டை மாற்றிய ஒரு தருணமாக அமைந்தது. அதைவிட 6 மாதங்களுக்கு முன்பாக மும்பை வான்கடே மைதானத்தில் 3 – 3 (6) என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன் செய்ததற்கே ஆண்ரூ பிளின்டாப் தனது சட்டையை கழற்றி இந்தியர்களை அவமானப்படுத்தியிருந்தார்.

அதை மனதில் வைத்திருந்த சௌரவ் கங்குலி இந்தியா வென்றதும் வரலாற்று சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதான பால்கனியில் தனது சட்டையை கழற்றி ஒருசில வார்த்தைகளை உபயோகித்து சுழற்றி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த தருணத்தை இப்போது நினைத்தாலும் ரசிகர்களுக்கு புல்லரிக்கும். அந்த வரலாற்று நிகழ்வு நடந்த ஜூலை 13-ஆம் தேதியான நேற்றுடன் 20 வருடங்கள் முடிந்த நிலைமையில் அந்த தருணங்களை பற்றி முகமது கைப், யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்தார்கள்.

- Advertisement -

நாடாளுமன்றத்தில் பாராட்டு:
இந்நிலையில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை கேப்டனாக முன்னின்று வழிநடத்திய சவுரவ் கங்குலியை இங்கிலாந்து நாடாளுமன்றம் பாராட்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் விளையாட்டுத்துறை சார்பில் தங்களது மண்ணில் சாதிக்கும் வெளிநாட்டவர்களையும் தங்களது பாராளுமன்றத்தில் பாராட்டும் இங்கிலாந்து இந்த வருடம் 2002இல் நாட்-வெஸ்ட் கோப்பையை வென்ற கங்குலியை பாராட்டுவதற்கு 6 மாதத்திற்கு முன்பாகவே திட்டமிட்டு அவரிடம் அதை தெரிவித்திருந்தது. அந்த நிலைமையில அப்போட்டி நடைபெற்று முடிந்த 20-வது வருட நாளில் அவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது பற்றிய சமீபத்திய பேட்டியில் சவுரவ் கங்குலி பேசியது பின்வருமாறு. “பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நான் பாராட்டைப் பெற்றதற்கு ஒரு பெங்காலியராக பெருமைப்படுகிறேன். அந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அவர்கள் என்னை 6 மாதங்களுக்கு முன்பாகவே இதுபற்றி தொடர்பு கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்கள் கொடுக்கும் இந்த விருதை இம்முறை நான் பெற்றுள்ளேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லா தெரியும். இதுல சொல்றதுக்கு எதும் இல்ல – கோலி குறித்து பேசிய கங்குலி

மேலும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் தோற்றாலும் அதன்பின் நடந்த டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்று அசத்தியதையும் சௌரவ் கங்குலி பாராட்டிப் பேசினார்.

Advertisement