ஐ.பி.எல் தொடரில் பும்ராவின் மிகப்பெரிய சாதனையை தகர்த்த உம்ரான் மாலிக் – அப்படி என்ன சாதனை தெரியுமா?

Umran
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது பிளேஆப் சுற்றினை நோக்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 65-வது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழந்து 193 ரன்களை குவித்தது.

Rahul Tripati

- Advertisement -

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 190 ரன்களை மட்டுமே அடித்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் திகழ்ந்தார். இப்போட்டியில் மூன்று ஓவர்களை வீசிய அவர் 23 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்த மூன்று விக்கெட்டுகளோடு சேர்த்து இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த சீசனில் மட்டும் அவர் தற்போதுவரை 20 மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த விக்கெட்டுகள் மூலம் அவர் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் கடந்த 2017ஆம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா தனது இருபத்தி மூன்றாவது வயதில் ஒரு சீசனில் 20-க்கும் மேற்பட்ட விக்கெட்டை வீழ்த்தி சாதனை செய்து இருந்தார்.

- Advertisement -

அந்த சாதனையை தற்போது உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார். அவர் தனது 22-வது வயதிலேயே ஒரு சீசனில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 24 விக்கெட்டுகளுடன் சாஹல் முதலிடத்திலும், ஹஸரங்கா இருபத்தி மூன்று விக்கெட்டுகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் டக் அவுட்டாகாமல் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

அதனைத்தொடர்ந்து ககிஸோ ரபாடா இருபத்தி இரண்டு விக்கெட்டுகள் உடன் 3-வது இடத்திலும், உம்ரான் மாலிக் 21 விக்கெட்டுகள் உடன் நான்காவது இடத்திலும், குல்தீப் யாதவ் 20 விக்கெட்டுகள் உடன் 5-ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement