ஐபிஎல் வரலாற்றில் டக் அவுட்டாகாமல் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Andrew Symonds Deccan
Advertisement

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் களமிறங்கும் பேட்ஸ்மென்கள் எதிரணி பவுலர்களை பந்தாடி அதிரடியாக சிக்சர்களையும் பவுண்டரிகளையும் தெறிக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து ரன் மழை பொழிவதையே விரும்புவார்கள். அப்படி அதிரடியாகவும் பெரிய ரன்களை பேட்ஸ்மேன்கள் எடுக்க முயற்சித்தாலும் அனைத்து போட்டிகளிலும் அது சாத்தியமாவது கிடையாது. மேலும் ஒரு பேட்ஸ்மேன் என்பவர் அதிரடியை காட்டுவதற்கும் அரை சதம், சதம் உட்பட பெரிய ரன்களை எடுப்பதற்கும் முதலில் நல்ல தொடக்கம் தேவைப்படுகிறது.

Virat Kohli vs GT

அப்படிப்பட்ட சூழ்நிலையில் களமிறங்கும் பெரும்பாலான பேட்ஸ்மென்கள் நல்ல தொடக்கத்தை பெறுவதற்காக எப்போதுமே முதல் ஒருசில பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு பிட்ச் எப்படி உள்ளது, பவுலர்கள் எப்படி வீசுகின்றனர் என்பதை கணித்த பின்பே அதிரடியை தொடங்குவார்கள். ஆனால் ஒருசில தருணங்களில் அவர்கள் கணிப்பதற்கு முன்பே தங்களது திறமையை வெளிப்படுத்தும் பவுலர்கள் அவர்களை டக் அவுட் செய்து பெவிலியன் திருப்பி விடுவார்கள்.

- Advertisement -

அதிலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கூட அதுவும் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானாது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. மொத்தத்தில் ஒரு பேட்ஸ்மேனுக்கு டக் அவுட் என்பது ஒரு அவமானத்தை போன்ற நிலைமையில் ஐபிஎல் வரலாற்றில் டக் அவுட்டாகாமல் அதிக ரன்கள் சேர்த்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

Faulkner

5. ஜேம்ஸ் பால்க்னர்: 2015 ஐசிசி உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் அசத்தலாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியவர். இவர் ஐபிஎல் தொடரிலும் 2011 – 2017 ஆகிய காலகட்டங்களில் புனே, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடினார். அந்தவகையில் 60 ஐபிஎல் போட்டிகளில் 45 இன்னிங்சில் களமிறங்கிய அவர் 527 ரன்களை 21.08 என்ற சுமாரான சராசரியில் எடுத்தாலும் ஒரு முறை கூட டக் அவுட்டானதே கிடையாது.

- Advertisement -

4. வெங்கடேஷ் ஐயர்: 2021 ஐபிஎல் தொடரில் இந்தியாவில் நடைபெற்ற முதல் பகுதியில் சொதப்பிய கொல்கத்தா துபாயில் நடைபெற்ற 2-வது பகுதியில் அற்புதமாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. துபாயில் 2-வது பகுதியில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற வெங்கடேஷ் ஐயர் ஒரு ஆல்-ரவுண்டராக மேஜிக் நிகழ்ச்சி அசத்தலாக செயல்பட்டதே அந்த அணியின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

venkatesh iyer

அதன் காரணமாகவே இந்தியாவிற்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவரை முதலில் 20 லட்சத்துக்கு வாங்கயிருந்த கொல்கத்தா அணி நிர்வாகம் இந்த சீசனில் 8 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தக்க வைத்தது. தற்போது வரை 20 ஐபிஎல் போட்டிகளில் 552* ரன்களை 29.05 என்ற சராசரியில் எடுத்து வரும் அவர் ஒருமுறை கூட டக் அவுட்டானதே கிடையாது என்ற நிலைமையில் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. சிவம் துபே: மற்றொரு இளம் இந்திய வீரர் சிவம் துபே 2019, 2020 ஆகிய ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி 2021இல் ராஜஸ்தானுகாக சுமாராக விளையாடி வந்த நிலையில் இந்த வருட ஏலத்தில் 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை அணி நிர்வாகம் வாங்கியது.

Shuvam Dube Robin Uthappa

அந்த வகையில் இந்த வருடம் 11 போட்டிகளில் 289 ரன்கள் எடுத்துள்ள இவர் மொத்தமாக ஐபிஎல் தொடரில் 35 போட்டிகளில் 33 இன்னிங்ஸ்சில் 688* ரன்களை எடுத்து வருகிறார். இவரும் இதுவரை ஒருமுறை கூட டக் அவுட்டானதே கிடையாது என்பதால் இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. ராகுல் திவாடியா: இளம் இந்திய ஆல்ரவுண்டர் ராகுல் திவாடியா 2014 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காக விளையாடினார். ஆரம்பகட்டத்தில் யார் என்றே தெரியாமல் இருந்து வந்த இவர் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுகாக விளையாடியபோது பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வி உறுதி என நினைத்த வேளையில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்டு மேஜிக் வெற்றியை பெற்றுக்கொடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பந்துவீச்சில் கணிசமாக விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய இவரை அதன் காரணமாகவே 9 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு இம்முறை குஜராத் வாங்கியது.

அந்த வகையில் மீண்டும் இந்த வருடம் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது 2 சிக்சர்களை பறக்கவிட்டு சூப்பர் பினிஷிங் செய்து தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். இதுவரை 61 போட்டிகளில் 45 இன்னிங்சில் 736* ரன்கள் எடுத்துள்ள இவரும் ஒரு முறை கூட டக் அவுட்டாகாமல் இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. ஆண்ட்ரூ சைமன்ஸ்: சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ஸ் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008இல் 5.40 கோடிக்கு அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரராக சாதனை படைத்தவர். அதிலும் 2009இல் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் அணியின் வெற்றிக்கு ஆல்ரவுண்டராக அசத்தியவர்.

Andrew Symonds Deccan Chargers

2008 – 2011 வரை டெக்கான் மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்காக 39 போட்டிகளில் 974 ரன்களையும் 20 விக்கெட்களையும் எடுத்து ஐபிஎல் தொடரிலும் தனக்கென ஒரு பெயரை ஆழமாக பதித்துவிட்டுச் சென்றுள்ளார். மொத்தம் 974 ரன்களை எடுத்த அவர் ஒருமுறை கூட டக் அவுட்டாகாமல் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இன்னும் சொந்தக்காரராக உள்ளார்.

Advertisement