டிராவிட் தான் ஏமாத்திட்டாரு. நீங்களாவது எங்களை கவனியுங்க – வாய்ப்புக்காக காத்திருக்கும் 2 இளம்வீரர்கள்

Dravid-and-Laxman
- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ரிஷப் பண்ட் தலைமையில் இந்த தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடிய இந்திய அணியானது 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஆனாலும் இந்த தொடரின் ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இன்றி விளையாடியது.

Laxman

- Advertisement -

அதன் காரணமாக முதன்முறையாக ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணிக்கு தேர்வான உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்றோர் தங்களது அறிமுக வாய்ப்பினை தென் ஆப்ரிக்க தொடரில் பெறவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிடும் ஏற்கனவே அணியில் திறமையான பல வீரர்கள் இருப்பதனால் அறிமுக வாய்ப்பை பெறும் வீரர்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும் என்று கறாராகக் கூறிவிட்டார்.

எனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் கூட அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் போனது. அதே வேளையில் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரை முடித்த கையோடு ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் மோத உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்பட உள்ளார்.

Umran Malik Rahul Dravid

நாளை துவங்கும் இந்த தொடர் வரும் 28 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரிலாவது தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காத்திருக்கின்றனர். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் அசத்தலாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் ஹர்ஷல் படேல் இடத்திற்க்கும், புதிய பந்தில் அசுர வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் ஆவேஷ் கான் இடத்திற்கும் விளையாட காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் இந்த விடயம் அணியின் பயிற்சியாளர் லக்ஷ்மணன் மனசு வைத்தால் மட்டுமே நடக்கும் என்பதனால் தற்போது டிராவிட் தான் தங்களை ஏமாற்றி விட்டார் நீங்களாவது எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்பது போன்று அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs IRE : போட்டி நடக்கும் டப்ளின் மைதானம் எப்படி? வரலாற்று சுவடுகள் – பிட்ச் ரிப்போர்ட் இதோ

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பலரது கவனத்தையும் ஈர்த்த இந்த இருவருக்கும் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியிலும் அவர்களுக்கு சற்று ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement