என்னை மறந்துட்டாங்க ! மீண்டும் இந்திய அணிக்குள் மாஸ் கம் பேக் கொடுப்பேன் – சீனியர் வீரர் உறுதி

Umesh Yadhav
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் கோலகலமாக தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் வாரத்தில் ரோஹித் சர்மா, ருதுராஜ் கைக்வாட் போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் எம்எஸ் தோனி, குல்தீப் யாதவ் போன்ற ஒருசில தரமான வீரர்கள் நீண்ட நாட்களுக்குப்பின் அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.

PBKS vs KKR Umesh

- Advertisement -

மிரட்டும் உமேஷ் யாதவ்:
அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்த வருடம் யாருமே எதிர்பாராத வண்ணம் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் அவர் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிராக அதிரடியாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன்பின் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் பஞ்சாப்க்கு எதிரான 3-வது போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார்.

இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் கொல்கத்தா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் பதிவு செய்த 2 போட்டிகளிலும் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை (10) வென்ற வேகப்பந்து வீச்சாளர், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுக்களை எடுத்த பந்து வீச்சாளர் (33 – பஞ்சாப்க்கு எதிராக) போன்ற சரித்திர சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

Umesh Yadav

மறக்கப்பட்ட ஹீரோ உமேஷ்:
இந்த அளவுக்கு மிரட்டலாக செயல்பட்டு வரும் அவர் சமீப காலங்களாக இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக ஆரம்ப காலங்களில் தொடர்ந்து 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்துவீசும் வல்லமை படைத்த அவர் இந்திய கிரிக்கெட்டில் 3 வகையான அணியிலும் முக்கிய பவுலராக விளையாடி வந்தார். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் அசத்தி வந்த அவர் அதன்பின் சற்று மோசமாக பந்து வீசியதால் இந்திய அணியில் இருந்தும் ஐபிஎல் தொடரில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார்.

- Advertisement -

அந்த மோசமான தருணங்களைக் பற்றி உமேஷ் யாதவ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய உண்மையான வெள்ளைப்பந்து கிரிக்கெட் பயணம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கியது. எனது கேரியரில் சரிவு ஏற்பட்டு இந்திய அணியில் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்த தருணங்களில் நான் மிகவும் சோகமடைந்தேன். அந்த நேரங்களில் திடீரென்று அனைவரும் என்னை ‘இவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார்’ என்பது போல் பேசினார்கள். எந்த ஒரு விஷயமும் திடீரென்று எப்படி மாறிவிடும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அதிலும் ஒரு கட்டத்தில் 2015 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளராக சாதனை படைத்த எனக்கு திடீரென எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது”

umesh

“இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் நானும் ஒருவனாக இருந்தேன். கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கனவு எங்களைப் போன்றவர்களுக்கு கடினமான ஒன்றாகும். ஏனெனில் பேட், ஷூ போன்ற கிரிக்கெட் பொருட்களை வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. நான் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்த குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை தினமும் நிலக்கரி சுரங்கத்தில் கடினமாக உழைப்பார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த என்னைப் போன்ற ஒருவன் இந்தியாவிற்காக விளையாட முடியாது என நினைத்தேன். ஆனால் விடாமுயற்சியால் இந்தியாவிற்கு விளையாடியது என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது” என ஆதங்கத்துடன் கூடிய உமேஷ் யாத்வ் தனது மோசமான ஆரம்பகால வாழ்க்கையை பகிர்ந்தார்.

- Advertisement -

கம் பேக் கொடுப்பேன்:
அவர் கூறுவது போல 2014இல் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக காலடி வைத்த அவர் அதன்பின் அற்புதமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்டார். அதில் 8 போட்டிகளில் பங்கேற்ற அவர் 18 விக்கெட்டுகளை எடுத்து அந்த உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்தார். மேலும் உலக கோப்பைகளில் ஒரு குறிப்பிட்ட உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய பவுலர் என்ற ஜாம்பவான் ரோஜர் பின்னியின் (18 விக்கெட்கள் 1983) சாதனையையும் சமன் செய்தார்.

Russell Umesh Yadhav

அப்படி அபாரமாக செயல்பட்டு உச்சத்தில் மின்னிக் கொண்டிருந்த அவர் ஒரு கட்டத்தில் மோசமாக பந்து வீசியதால் “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்” என முத்திரை குத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டார். அதன்பின் ஐபிஎல் தொடரிலும் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த அவர் இந்திய டெஸ்ட் அணியிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் பெஞ்சில் அமர்ந்து வருகிறார். அதுபோன்ற தருணங்கள் தனது மனதை உடைத்ததாக உமேஷ் யாதவ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதன்பின் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் சிறப்பாக செயல்பட்டு கடைசியாக கடந்த 2018 – 2019 காலகட்டத்தில் இந்திய வெள்ளைப்பந்து அணிக்கு திரும்பிய அவர் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க : பேப்பரில் மட்டும்தான் ஜடேஜா பெயருக்கு கேப்டன்! மற்றபடி எல்லாம் அவர்தான் – தோனியை விளாசும் முன்னாள் வீரர்

இருப்பினும் தற்போது ஐபிஎல் 2022 தொடரில் மிரட்டலாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக ஊதா தொப்பிபியை வென்று சாதனை படைத்து வருகிறார். எனவே இதை வைத்து இந்திய அணிக்குள் மீண்டும் காலடி வைக்க முயற்சிக்க உள்ளதாக உமேஷ் யாதவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement