பேப்பரில் மட்டும்தான் ஜடேஜா பெயருக்கு கேப்டன்! மற்றபடி எல்லாம் அவர்தான் – தோனியை விளாசும் முன்னாள் வீரர்

Advertisement

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பி அடுத்தடுத்த 3 தோல்விகளைச் சந்தித்தது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடி வருகிறது.

CSK-1

ஜடேஜாவை வழிநடத்தும் தோனி:
இதனால் நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை எப்படி இந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் கோப்பையை தக்க வைக்கப் போகிறது என்ற மிகப்பெரிய கவலை அந்த அணி ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடர் தொடங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக காலம் காலமாக கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி திடீரென பதவி விலகியதுடன் கேப்டன்சிப் பொறுப்பை மற்றொரு வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அந்த அணியை 12 சீசன்களில் வழி நடத்திய அவர் தனது அபாரமான கேப்டன்ஷிப் வாயிலாக 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று அதில் 9 முறை இறுதிப் போட்டிகளில் விளையாட வைத்து 4 கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்துள்ளார்.

jadeja

அப்படிப்பட்ட அவர் 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில்கொண்டு சென்னையின் அடுத்த கேப்டனை உருவாக்குவதற்காக இந்த முடிவை எடுத்து ஜடேஜா தலைமையில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். அந்த நிலையில் கேப்டன்சிப் பதவியில் விலகினாலும் ஜடேஜாவுக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் எம்எஸ் தோனி செயல்படுவார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது. அதேபோலவே இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஜடேஜாவுக்கு நிறைய உதவிகளையும் ஆதரவையும் தோனி வழங்கி வருகிறார். ஏனென்றால் இதற்கு முன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கூட ஜடேஜாவுக்கு கேப்டன்ஷிப் செய்த அனுபவம் சுத்தமாக கிடையாது.

- Advertisement -

ஜடேஜா வெறும் பேப்பர் கேப்டன்:
அதற்காக ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாமல் இக்கட்டான தருணங்களில் அனைத்து முடிவுகளையும் எம்எஸ் தோனி தான் எடுத்து வருகிறார் என்று கடந்த ஒரு வாரமாகவே அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக லக்னோ எதிராக நடந்த 2-வது போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட போது அதுவரை ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்த ஷிவம் துபேவை பந்துவீச எம்எஸ் தோனி அழைத்ததையும் அதில் சிவம் துபே 25 ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்டதும் பல விமர்சனங்களுக்கு உள்ளானது.

MS Dhoni Jadeja

இந்நிலையில் ஜடேஜாவை வெறும் பேப்பரில் பெயருக்கு கேப்டனாக வைத்துள்ளதாக எம்எஸ் தோனி மீது முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விமர்சனம் வைத்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எவின் லெவிஸ் சுழல் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொள்ளமாட்டார். அதனாலேயே மும்பை அவரை கழற்றி விட்டது. அந்த நிலையில் 3 ஓவர்கள் எஞ்சியிருந்த மொய்ன் அலியை அவர்கள் உபயோகப்படுத்தவில்லை. அதேசமயம் வேகப்பந்து வீச்சை அவர் எப்போதுமே சிக்சர்களாக பறக்க விடுவார். எனவே மொய்ன் அலிக்கு பந்துவீச கொடுக்காதது ஒரு தவறாகும். மேலும் அந்த முடிவை ஜடேஜா எடுக்கவில்லை.

- Advertisement -

இப்போதும்கூட களத்தில் நிறைய முடிவுகளை எம்எஸ் தோனி தான் எடுத்து வருகிறார். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த போதிலும் சென்னை அணி வீரர்கள் நார்மலாக உள்ளனர். அதற்கு காரணம் பேப்பரில் தோனி கேப்டனாக இல்லாமல் இருந்தாலும் அவர்தான் சென்னை அணியை வழி நடத்துகிறார். தற்போது அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் தடுமாறும் அவர்களின் அணி பலவீனமாக உள்ளது. பேட்டிங் ஓரளவு சுமாராக இருந்தாலும் பந்துவீச்சில் நிறைய முன்னேற்றங்கள் தேவைப்படுகிறது” என கூறினார்.

Kaif

என்னதான் ஜடேஜாவுக்கு உதவியாக மட்டுமே தோனி இருப்பார் என சென்னை அணி நிர்வாகம் கூறினாலும் இப்போதும்கூட சென்னையை முழுமையாக கட்டுப்படுத்துவது தோனியாக தான் உள்ளார் என முகமது கைஃப் குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த கேப்டனை வளர்க்க நினைக்கும் தோனி அவருக்கு முழு சுதந்திரம் அளிக்காமல் இப்படி கட்டுப்படுத்தினால் எப்படி அவரால் வளர முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : 3-4 சீசனா இதுக்காக தான் அவர் வெயிட் பண்ணிட்டு இருந்தாரு – இளம்வீரரை பாராட்டிய கே.எல் ராகுல்

மேலும் அடுத்தடுத்த தோல்விகளால் சென்னை அணி பதற்றம் அடையவில்லை என்றாலும் இந்த வருடம் அந்த அணி சற்று பலவீனமாக உள்ளதால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்றும் முகமது கைப் கணித்துள்ளார்.

Advertisement