3-4 சீசனா இதுக்காக தான் அவர் வெயிட் பண்ணிட்டு இருந்தாரு – இளம்வீரரை பாராட்டிய கே.எல் ராகுல்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் நேற்று டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆனால் கேப்டன் ராகுல் உடன் இணைந்த தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த லக்னோ அணி இறுதியில் நல்ல ஸ்கோரை எட்டியது.

rahul 1

- Advertisement -

இறுதியில் லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக ராகுல் 68 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் குவித்தனர். பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியை சிறப்பாக துவங்கி தட்ட 15 ஓவர் வரை வெற்றியை கையில் வைத்திருந்த வேளையில் லக்னோ அணியின் சிறப்பான டெத் பவுலிங் மூலமாக அவர்களால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் காரணமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிநேரத்தில் சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து லக்னோ அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் :

hooda

இந்த போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் எப்போதுமே போட்டியில் இருக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றி தேடித் தந்து விட்டனர். பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டாலும் மீண்டும் எப்படி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டு வருவது என்பதை இந்த போட்டியில் செய்து காட்டியுள்ளோம்.

- Advertisement -

அதோடு தீபக் ஹூடாவுடன் நிறைய விளையாடி இருக்கிறேன். கடந்த மூன்று நான்கு சீசன்ங்களாக அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அவருக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். வலை பயிற்சியின் போது அதிக நேரம் செலவிட்டு பேட்டிங் பயிற்சி மேற்கொள்கிறார். எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.

இதையும் படிங்க : பிறந்த நாளன்று இப்படியா? வாழ்த்து மழையில் நனைந்த நம்ம யார்க்கர் நடராஜன் – முழு விவரம் இதோ

அந்த வகையில் வாய்ப்புக்காக காத்திருந்த அவர் தற்போது தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்துகிறார். நிச்சயம் அவர் இந்த இடத்தில் இருந்து இன்னும் பெரிய உயரத்துக்கு செல்வார். மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் அட்டகாசமாக இருந்தது என ராகுல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement