பிறந்த நாளன்று இப்படியா? வாழ்த்து மழையில் நனைந்த நம்ம யார்க்கர் நடராஜன் – முழு விவரம் இதோ

Nattu
- Advertisement -

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 4-ஆம் தேதி நடந்த 12-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளும் நேருக்கு நேர் மோதின. நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதெராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/7 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் 27/3 என சரிந்த அந்த அணியை கேப்டன் கேஎல் ராகுல் – தீபக் ஹூடா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து லக்னோவை நல்ல நிலைக்கு எடுத்து வந்தது.

காப்பாற்றிய ராகுல்:
தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடியில் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட அதிரடியாக 51 ரன்கள் குவித்த தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆரம்பம் முதல் நங்கூரமாக விளையாடி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 50 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். ஹைதெராபாத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷெபார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இதை தொடர்ந்து 170 என்ற நல்ல இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு அதன் தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் 16 ரன்களிலும் அபிஷேக் சர்மா 13 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் 38/2 என சுமாரான தொடக்கத்தைப் பற்றி அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய இந்திய வீரர் ராகுல் திரிப்பாதி அதிரடியாக 30 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 44 ரன்கள் விளாசி காப்பாற்றினார்.

ஹைதெராபாத் தோல்வி, அசத்திய நட்டு:
ஆனால் அதை வீணடிக்கும் வகையில் அவருடன் விளையாடிய ஐடன் மார்க்ரம் 14 பந்துகளில் 12 ரன்களில் அவுட்டாக அவருக்குப்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய லக்னோ அடுத்து வந்த அப்துல் சமத்தை கோல்டன் டக் அவுட் செய்து ரோமரியா ஷெபார்டை 8 ரன்களில் காலி செய்து போட்டியை தன் பக்கம் திருப்பியது. இப்படி கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 157/9 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன் வாயிலாக இந்த வருடம் அந்த அணி பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் தவிக்கிறது.

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தாலும் அந்த அணிக்காக களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அற்புதமாக பந்து வீசினார். குறிப்பாக 27/3 என சரிந்த லக்னோவை காப்பாற்ற போராடிய கேஎல் ராகுல் – தீபக் ஹூடா ஜோடி அதிரடியாக பேட்டிங் செய்து ஹைதராபாத் பவுலிங்கை பிரித்து மேய்ந்தது. இதனால் 200 நோக்கி பறந்து கொண்டிருந்த அந்த அணியை 18-வது ஓவரை வீசிய நடராஜன் அப்படியே தடுத்து நிறுத்தினார் என்றே கூறலாம். ஏனெனில் 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அதிரடி பேட்டிங் செய்து கொண்டிருந்த ராகுலை தனது அபாரமான யார்க்கர் பந்தால் எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்த அவர் அந்த ஓவரின் 4-வது பந்தில் க்ருனால் பாண்டியாவை க்ளீன் போல்டாக்கினார். இதனால் குறைந்தது 190 ரன்களை தொட்டிருக்கவேண்டிய லக்னோ 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

பிறந்தநாளில் கலக்கிய நட்டுவுக்கு வாழ்த்து மழை:
மேலும் நேற்றைய போட்டியில் தலா 2 விக்கெட்டுகளை எடுத்த மற்றொரு தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் மற்றும் ஷெபார்ட் ஆகியோரை விட துல்லியமாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 26 ரன்களை 6.50 என்ற சிறப்பான எக்கனாமியில் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் ஆச்சரியப்படும் அம்சமாக நேற்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடிய நடராஜன் களத்தில் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை பயன்படுத்தி அபாரமாக பந்து வீசியது பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

குறிப்பாக பிறந்தநாளில் பிரமாதமாக பந்துவீசிய அவருக்கு தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். சேலம் மாவட்டதின் ஒரு கிராமத்தை சேர்ந்த அவர் ஆரம்ப காலங்களில் டிஎன்பிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாடுக்காக விளையாடி தனது அபாரமான யார்கர் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணியில் ஒரு நெட் பவுலராக காலடி வைத்தார்.

- Advertisement -

அந்த நிலையில் ஒரு சில முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால் இந்தியாவுக்காக விளையாடும் பொன்னான வாய்ப்பை பெற்ற அவர் அதை கச்சிதமாக பயன்படுத்தி தனது அபார திறமையால் வெற்றிகளைத் தேடி கொடுத்தார். அதன் காரணமாக முதலில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் அறிமுகமான அவர் அதன்பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வகையான இந்திய அணியிலும் விளையாடி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.

இதையும் படிங்க : தொடர்ச்சியாக 150 கீ.மீ மின்னல் வேகத்தில் வீசும் இளம் இந்திய வீரர் – ஸ்டைன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் பாராட்டு

இருப்பினும் அதன்பின் காயத்தால் விலகிய அவர் தற்போது அதிலிருந்து குணமடைந்து மீண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தொடங்கியுள்ளார். தற்போது 31 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதேபோல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என அவரின் 31-வது பிறந்த நாளில் தமிழக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement