இந்திய அணியில் இருந்து இன்னும் அவரை நாங்க தூக்கல. அவர் காயத்தால் இடம்பெறாமல் போயிட்டாரு – பி.சி.சி.ஐ விளக்கம்

Umesh
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பி.சி.சி.ஐ மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

அதன்படி அறிவிக்கப்பட்ட இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் அனுபவ வீரர்களான இவர்கள் இருவரையும் அதிரடியாக நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணிக்குள் இணைத்தது தவறு என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

Umesh Yadav 1

இந்நிலையில் உமேஷ் யாதவ் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் அவர் காயம் காரணமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் உமேஷ் யாதவ் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்த பிறகு தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாகவே தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இங்கிலாந்து வீரராக ஜாஸ் பட்லர் படைத்த மாபெரும் சாதனை – விவரம் இதோ

இதன் காரணமாகவே அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கவில்லை என்றும் நிச்சயம் அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் தொடர்ந்து பரிசீலனையில் தான் இருப்பார் என்றும் உறுதி கொடுத்துள்ளது. இதுவரை இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள உமேஷ் யாதவ் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement