இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் கடந்த 2011-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 57 டெஸ்ட் போட்டிகள், 165 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 106 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் தற்போது வரை 96 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பட்டையை கிளப்பி வரும் ஜாஸ் பட்லர் தற்போது உள்நாட்டில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு போட்டியில் விளையாடிய ஜாஸ் படிலர் 36 பந்துகளை சந்தித்து வழக்கம் போலவே தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 83 ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார். அவர் அடித்த இந்த 83 ரன்கள் மூலம் டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை அவர் கடந்துள்ளார்.
ஒட்டு மொத்தமாக தற்போது அனைத்து வகையான டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 10,080 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதே டி20 போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த ஒன்பதாவது உலகளாவிய வீரர் என்ற பெருமையை ஜாஸ் பட்லர் பெற்றுள்ளார். அதோடு இங்கிலாந்து அணி சார்பாக டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா கிரிக்கெட்டின் லேட்டஸ்ட் சோக்கரா? 2023 உ.கோ வெல்லுமா – ரசிகர்களின் ஆதங்கத்துக்கு ரவி சாஸ்திரி பதில்
இவருக்கு முன்னதாக கிரிஸ் கெயில், சோயிப் மாலிக், கைரன் பொல்லார்ட், விராட் கோலி, டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஏடி ஹேல்ஸ், ரோகித் சர்மா ஆகியோர் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.