இந்தியா கிரிக்கெட்டின் லேட்டஸ்ட் சோக்கரா? 2023 உ.கோ வெல்லுமா – ரசிகர்களின் ஆதங்கத்துக்கு ரவி சாஸ்திரி பதில்

Ravi-Shastri
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வி வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பிய இந்தியா கொஞ்சமும் போராடாமல் தோற்றதே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அது போக நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

அத்துடன் கடைசியாக கடந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா 2015 உலகக் கோப்பை மற்றும் 2016 டி20 உலக கோப்பைகளில் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அவரை தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் படுதோல்வியை சந்தித்து 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்திடம் ரவீந்திர ஜடேஜா எம்எஸ் தோனி ஆகியோரது போராட்டத்தையும் தாண்டி தோற்றது.

சோக்கர் இந்தியா:
மேலும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இதே போல் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த நிலையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த ரோகித் தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோற்ற இந்தியா எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை நிரூபித்துள்ளது.

INDvsPAK

அதனால் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா சோக்கர்கள் என்றால் இந்தியா லேட்டஸ்ட் நாக் அவுட் சோக்கர்கள் என்று சமூக வலைதளங்களில் வேதனையை வெளிப்படுத்தும் இந்திய ரசிகர்கள் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையையும் வெல்லப்போவதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்றாலும் இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ஃபைனல் வரை சென்று தோற்பதால் நாம் சோக்கர்கள் அல்ல என்று மறுக்கும் அவர் பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “முதலில் டெஸ்ட் சாம்பியன்சிப் ஃபைனலில் தோற்றதற்காக நான் பதற்றமடைய மாட்டேன். அது இந்திய அசத்தும் வேறு விதமான கிரிக்கெட்டாகும். இருப்பினும் இந்த உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் விளையாடுவதால் நிச்சயமாக அவர்கள் வெல்வதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நம்மிடம் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தயாராக இருப்பதுடன் அவர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க போதுமான நேரம் இருக்கிறது”

Shastri

“எனவே வலுவான அணியை தேர்வு செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியாவுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் நம்மை சோக்கர் என்று சொல்ல மாட்டேன். மேலும் ஃபைனலில் விளையாடிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 விதமான உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயம் நாம் உலகக் கோப்பை செமி ஃபைனல் மற்றும் ஃபைனல்களில் சொதப்புகிறோம் என்று சொல்ல முடியாது. இருப்பினும் நம்மால் அணியாக சிறப்பாக செயல்பட முடியாத காரணத்தால் கோப்பை வெல்ல முடியவில்லை”

இதையும் படிங்க:ரன்கள் அடிச்சுட்டா போதுமா? மதிக்க கத்துக்கோங்க – புறக்கணிப்பட்ட சர்பராஸ் மீது பிசிசிஐ அடுக்கடுக்கான புகார்

“அதற்காக கேப்டன் அல்லது குறிப்பிட்ட வீரரை குறை சொல்லி அர்த்தமில்லை. பொதுவாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நீங்கள் சதமடித்தால் பவுலர்கள் வெற்றி போராடி வெற்றி காண்பதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும் டி20, 50 ஓவர் அல்லது டெஸ்ட் என எந்த வகையான உலக கோப்பையாக இருந்தாலும் பைனலில் குறைந்தபட்சம் 3 பேராவது அரை சதமடிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் கோப்பையை வெல்ல தகுதியற்றவர்கள்” என்று கூறினார்.

Advertisement