ரன்கள் அடிச்சுட்டா போதுமா? மதிக்க கத்துக்கோங்க – புறக்கணிப்பட்ட சர்பராஸ் மீது பிசிசிஐ அடுக்கடுக்கான புகார்

Sarfaraz-khan-2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்போதுமே உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் ரன் மெஷினாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் 3505 ரன்களை 80 என்ற சிறப்பான சராசரியில் குவித்து இந்தியாவுக்கு விளையாடும் லட்சியத்துடன் இதர வீரர்களை காட்டிலும் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இருப்பினும் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் ஓரிரு சீசன்களில் அசத்தும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தேர்வுக்குழு ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளது. குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் அந்த இருவருமே முறையே 81, 42 என்ற குறைந்த சராசரியில் ரன்களை எடுத்தும் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர்களை விட அதிக சராசரியில் அதிக ரன்களை எடுத்தும் ஐபிஎல் தொடரில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத காரணத்தால் சர்பராஸ் கான் நீக்கப்பட்டுள்ளது பல முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

- Advertisement -

உண்மையான பின்னணி:
இந்நிலையில் கடந்த வருடம் ரஞ்சிக் கோப்பையில் செயல்பாடுகளை பார்ப்பதற்காக மைதானத்திற்கு நேரில் சென்றிருந்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மாவை நோக்கி சதமடித்த சர்பராஸ் கான் கையை நீட்டி கொண்டாடி நன்னடத்தையின்றி நடந்து கொண்டதாலேயே தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் வாய்ப்புக்காக தொடர்ந்து போராடாமல் தேர்வுக்குழுவை சமூக வலைதளங்களில் விமர்சிப்பதும் சுமாரான ஃபிட்னஸ் கடைபிடிப்பதும் அவருடைய தேர்வு தாமதமாவதற்கு காரணம் என்று தெரிய வருகிறது. ரசிகர்கள் சொல்வது போல் கிரிக்கெட்டை தாண்டிய நன்னடத்தைப் போன்ற காரணங்களால் அவர் ஒதுக்கப்படுகிறாரே தவிர அரசியல் காரணங்கள் கிடையாது என செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி சமீபத்திய பேட்டியில் விரிவாக விளக்கமளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“தேர்வு செய்யப்படாததற்காக கோபமான ரியாக்சன்கள் கொடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சர்பராஸ் கான் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவதற்கு கிரிக்கெட்டை தாண்டிய காரணங்கள் இருக்கிறது என்று ஓரளவு உறுதியாக சொல்ல முடியும். குறிப்பாக அவர் ஒதுக்கப்படுவதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. முதலில் அடுத்தடுத்த சீசன்களில் 900க்கும் மேற்பட்ட ரன்களை அடுத்த வீரரை புறக்கணிப்பதற்கு தேர்வுக்குழு முட்டாள்களா? சர்வதேச தரத்துக்கு நிகராக ஃபிட்னஸ் கடை பிடிக்காதது அவர் புறக்கணிக்கப்படுவதற்கு முதன்மை காரணமாகும்”

“எனவே பேட்டிங்கில் அசத்தினால் மட்டும் இந்தியாவுக்கு தேர்வாகி விட முடியாது. ஒருவேளை அவர் கடினமாக உழைத்து தன்னுடைய உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வந்து இதே செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் வாய்ப்பு கிடைக்கும். அதை விட களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவருடைய நன்னடத்தை திருப்தியளிக்கும் அளவுக்கு இல்லை. குறிப்பாக தேர்வு குழுவினருக்கு எதிரான சைகைகளை அவர் செய்தார். அதனால் நன்னடத்தையுடன் நடந்து கொள்வதே அவருக்கு நல்ல உலகிற்கான வழியை காண்பிக்கும்”

- Advertisement -

“இந்த விஷயத்தில் அவரும் அவருடைய தந்தை மற்றும் பயிற்சியாளர் நவ்ஷத் கான் ஆகியோரும் திருத்தம் செய்வார்கள் என்று நம்புகிறோம். அத்துடன் ஒரே மாதத்தில் 1000 ரன்களை உள்ளூர் கிரிக்கெட்டில் அடுத்த காரணத்தாலேயே மயங்க அகர்வால் தேர்வானார். அப்போது எம்எஸ்கே பிரசாத் அவருடைய ஐபிஎல் செயல்பாடுகளை பார்த்தாரா? அதே போல ஹனுமா விகாரி உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிக்காக வெளிப்படுத்திய செயல்பாடுகள் காரணமாகவே தேர்வு செய்யப்பட்டார்”

இதையும் படிங்க:வீடியோ : என்னா ஒரு சிம்ப்ளிசிட்டி, விமான பெண்ணின் பரிசை ஏற்ற தல தோனி – என்ன கேம் விளையாடினார் தெரியுமா?

“அப்போதெல்லாம் அவர்களுடைய ஐபிஎல் செயல்பாடுகளை யாரும் பார்க்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் எஸ்எஸ் தாஸ் மட்டும் ஏன் அதை பார்க்க வேண்டும்? எனவே சர்ப்ராஸ் ஒதுக்கப்படுவதற்கான காரணம் மிகவும் எளிதானது. அது கிரிக்கெட்டுடன் சம்பந்தமற்றது” என்று கூறினார்.

Advertisement