வீடியோ : என்னா ஒரு சிம்ப்ளிசிட்டி, விமான பெண்ணின் பரிசை ஏற்ற தல தோனி – என்ன கேம் விளையாடினார் தெரியுமா?

- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டு 2004ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே டக் அவுட்டானாலும் குறுகிய காலத்தில் அதிரடியாக செயல்பட்டு நிரந்தர இடத்தைப் பிடித்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக இல்லாமல் பேட்டிங்கில் பெரிய ரன்களை குவித்து வெற்றியில் பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாகுவதற்கு இலக்கணமாக செயல்பட்டார்.

அத்துடன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வென்று காட்டிய அவர் 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் ஒன் அணியாக முன்னேற்றி 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து வென்று காட்டினார். அதே போல 2013 சாம்பியன்ஸ் டிராபியை தாம் உருவாக்கிய இளம் வீரர்களை வைத்து வென்ற அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த சில வருடங்களில் படிப்படியாக கேப்டன்ஷிப் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடினார்.

- Advertisement -

தோனியின் எளிமை:
மேலும் நிறைய போட்டிகளில் கடைசி வரை நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஃபினிஷராக போற்றப்படும் அவர் வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அந்த வகையில் 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இந்த வருடம் மீண்டும் சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி 5வது கோப்பையை வென்ற அவர் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற சாதனையும் படைத்தார்.

விரைவில் 42 வயதாகும் அவர் அந்த தொடரில் முழங்கால் வலியுடன் தொடர்ந்து விளையாடுவது ரசிகர்களை ஆதங்கப்பட வைத்தது. இருப்பினும் தற்போது அதற்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு குணமடைந்து வரும் அவர் நேற்று விமானத்தில் ஏதோ ஒரு ஊருக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவரை மகிழ்விப்பதற்காக விமானத்தில் பணிபுரியும் ஊழியர் பெண் ஒருவர் நிறைய சாக்லேட் மற்றும் பிஸ்கட் இனிப்பு பண்டங்களை தட்டில் வைத்து தோனியிடம் சென்று நீட்டினார். அந்த சமயத்தில் மிகவும் ஆர்வமாக பிரபல கேண்டி க்ரஷ் விளையாட்டை டேப்லட் போனில் விளையாடிக் கொண்டிருந்த அவர் அதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

- Advertisement -

மேலும் எந்தளவுக்கு உங்களை பிடிக்கும் என்று அந்த விமான ஊழியர் பெண்கள் ஒரு துண்டு எழுதியதையும் அவரிடம் கொடுத்தனர். அதை புன்னகை மிகுந்த முகத்துடன் வாங்கிக் கொண்ட தோனி சில அன்பான வார்த்தைகளை பேசிவிட்டு “இவ்வளவு சாக்லேட்டுகள் எனக்கு எதற்கு இது மட்டும் போதும்” என்று ஒரே ஒரு இனிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை அந்த பெண்ணிடமே கொடுத்து விட்டார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக எப்போதுமே எளிமையாக இருக்கக்கூடிய தோனி பல கோடிகளை வைத்திருந்தாலும் அந்த விமானத்தில் சாதாரண மக்களுடன் பயணிக்கும் எகனாமிக்கல் கிளாஸ் பயணத்தை தேர்ந்தெடுத்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது. அதனால் என்ன ஒரு குணம் கொண்ட எளிமையான மனிதர் என்று ரசிகர்கள் அவரை வழக்கம் போல பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:TNPL 2023 : நானும் பேட்ஸ்மேன் தான் என மிரட்டிய சாய் கிசோர் – திருப்பூர் பெரிய வெற்றி, திருச்சி லீக் சுற்றுடன் வெளியேறியதா?

அத்துடன் கம்ப்யூட்டர் கேம் விளையாட்டு பிரியரான தோனி அந்த சமயத்தில் பொழுதுபோக்கிற்காக கேண்டி கிரஷ் விளையாட்டை விளையாடியதும் ரசிகர்களை கவர்ந்தது. அதனால் தோனி கேண்டி கிரஷ் விளையாடுகிறார் என்று தெரிந்ததும் அந்த வார்த்தையும் விளையாட்டும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த வருடம் தோனி விளையாடுவாரா என்பதும் உறுதியாக தெரியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement