- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ட்ராப் பண்ணதுக்காக 1 நாள் பேசாம இருந்த அவர் அற்புதமான டீம் பிளேயர் – பரிதாப இந்திய வீரரை பாராட்டும் பரத் அருண்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் திண்டாடிய இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் ஸ்பின்னர்கள் ராஜாங்கம் நடத்திய அந்த போட்டியில் பேட்ஸ்மேன்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் ஜொலிக்க முடியாமல் தடுமாறினர்.

ஆனால் நீண்ட நாட்கள் கழித்து விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற்ற உமேஷ் யாதவ் அந்த பிட்ச்சிலும் கூட ஸ்விங் செய்து அற்புதமாக பந்து வீசி முதல் இன்னிங்ஸில் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்க விட்டு 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். குறிப்பாக 186/4 என முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் வலுவாக இருந்த ஆஸ்திரேலியாவை அடுத்த 11 ரன்களுக்குள் 197 ரன்களுக்கு சுருட்ட முக்கிய பங்காற்றிய அவர் 2 சிக்ஸர்கள் உட்பட பேட்டிங்கில் அதிரடியாக 17 (13) ரன்களை அடித்து இந்தியாவை 100 ரன்கள் தாண்ட வைத்து முக்கிய அவமானத்திலிருந்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

டீம் பிளேயர்:
அதை விட கடந்த வாரம் தனது தந்தையை இழந்த உமேஷ் யாதவ் அணியிலிருந்து விலகி தனது கடமைகளை செய்து விட்டு மீண்டும் உடனடியாக இணைந்து இந்தியாவுக்காக முடிந்தளவு இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டது ரசிகர்களின் பாராட்டுகள் பெற்றது. ஆனால் அப்படி சிறப்பாக செயல்பட்டும் 3வது போட்டியில் இந்தியா தோற்றதால் 4வது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த உமேஷ் யாதவ் கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் 168 விக்கெட்களை எடுத்து சிறப்பாக செயல்பட்டும் இடையே பும்ரா, சிராஜ் போன்ற வீரர்கள் வந்ததால் தொடர்ந்து வாய்ப்பு பெறவில்லை.

காரணம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறியதால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. அதனால் டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்பட்டும் நியாயமின்றி நீக்கும் போதெல்லாம் அவர் தம்மிடம் ஒருநாள் பேசாமல் இருப்பார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். இருப்பினும் இறுதியில் நிலையை புரிந்து கொண்டு அவராகவே வந்து பேசுவார் என்று தெரிவிக்கும் பரத் அருண் உமேஷ் யாதவ் மிகச் சிறந்த அணியின் நலனை விரும்பும் வீரர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த காலங்களில் பலமுறை சிறப்பாக செயல்பட்டும் உமேஷ் யாதவ் காரணமின்றி நீக்கப்பட்டுள்ளார். அந்த சமயங்களில் எல்லாம் அவர் என்னிடம் வந்து “என்னை ஏன் நீக்கினீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்” என்று கேட்பார். அதற்கு நான் பதிலளித்தாலும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அது போன்ற கடின முடிவுகளை எடுக்க வேண்டியது இருந்தது. குறிப்பாக ஷமி, பும்ரா, இஷாந்த் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியா 4வது பவுலராக இருந்ததால் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டும் தொடர்ந்து நியாயமின்றி நீக்கப்பட்டார்”

“அதனால் சில சமயங்களில் கோபமடைந்து அவர் என்னிடம் ஒருநாள் முழுக்க பேசாமல் இருப்பார். ஆனால் இறுதியில் நிலைமையை புரிந்து கொண்டு அவராகவே வந்து என்னிடம் பேசுவார். அப்போதெல்லாம் நானும் அவரிடம் “உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் உங்கள் மீது ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். அதனால் தான் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்” என்று அவரது கோபத்துக்கு மதிப்பளித்து ஆறுதல் தெரிவிப்பேன்”

இதையும் படிங்க: IND vs AUS : இந்தியா தலையிட்டாதா – 4வது போட்டி நடைபெறும் அகமதாபாத் பிட்ச் எப்படி இருக்கும்? கியூரேட்டர் கொடுத்த ரிப்போர்ட்

“என்னை கேட்டால் உமேஷ் யாதவ் அற்புதமான அணியின் நலனை விரும்பும் வீரர். அதனால் அவரை எப்போதும் நீங்கள் உங்களது அணியில் வைத்திருக்க விரும்புவீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -