IND vs AUS : தந்தையின் இறப்பால் 3 ஆவது போட்டிக்கான அணியில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் – விவரம் இதோ

Umesh-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது 2 போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியானது போட்டியின் மூன்றாவது நாளிலே முன்கூட்டியே முடிவடைந்ததால் ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு உள்ள காரணத்தினால் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் அனைவருமே தற்போது சிறிய இடைவெளியில் வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவியின் தந்தை திலக் யாதவ் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 74 வயதாகும் தந்தை திலக் யாதவ் நாக்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையாததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தார்.

இப்படி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது இந்த மறைவு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். உமேஷ் யாதவியின் தந்தை இளமைப் பருவத்தில் ஒரு மல்யுத்த வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மறைந்த திலக் யாதவிற்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத உமேஷ் யாதவ் எதிர்வரும் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : IPL 2023 : ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக செயல்படப்போவது இவர்தான் – விவரம் இதோ

இவ்வேளையில் அவரது தந்தையின் மறைவு காரணமாக அவர் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகமான உமேஷ் யாதவ் இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement