IPL 2023 : ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக செயல்படப்போவது இவர்தான் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது. அதேபோன்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் சொந்த மைதானங்களில் விளையாடுவதால் இந்த தொடரானது அனைவரது மத்தியிலும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Kane Williamson DC vs SRH

- Advertisement -

அதோடு இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தற்போது தங்களது அணியில் உள்ள வீரர்களை வரிசைப்படுத்தி பயிற்சிக்கு தயாராக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஒரு சில அணிகளில் கேப்டன் மாற்றம் என்பது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சையில் இருப்பதன் காரணமாக அவரால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமாக பங்கேற்க முடியாது என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதன் காரணமாக டெல்லி அணிக்கு புதிய கேப்டன் நியமனம் ஆவது உறுதி என்று கூறப்பட்டது.

David Warner 3

இவ்வேளையில் யார் டெல்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இந்நிலையில் அதற்கு விடை கிடைக்கும் விதமாக வெளியான அறிவிப்பின்படி டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் கூறுகையில் : டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக இந்த சீசனில் செயல்படுவார் அதோடு அச்சர் பட்டேல் துணை கேப்டனாக செயல்படுவார் என்று உறுதியான தகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் அணியை தலைமை தாங்கி வழிநடத்தி கோப்பையை வென்ற டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பிற்கு தகுதியானவர் என்பதினால் டெல்லி அணி அவரை கேப்டனாக நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : எல்லாரும் அந்த இளம் வீரரை ட்ராப் பண்ண சொன்னப்போ விராட் கோலி தான் அண்ணன் மாதிரி காப்பாத்துனாரு – டிகே பாராட்டு

அதேபோன்று அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட இருக்கும் அக்சர் பட்டேல் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என அவர் இரண்டு துறையிலுமே அசத்துவதால் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement