எல்லாரும் அந்த இளம் வீரரை ட்ராப் பண்ண சொன்னப்போ விராட் கோலி தான் அண்ணன் மாதிரி காப்பாத்துனாரு – டிகே பாராட்டு

- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐசிசி உலகக்கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெளிநாடுகளில் நடைபெற்ற இருதரப்பு தொடர்களில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் அனைத்து நாடுகளிலும் எதிரணிகளை தெறிக்க விட்ட அவர் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சுப்மன் கில் போன்ற நிறைய தரமான வீரர்களுக்கு கேப்டனாக வாய்ப்பளித்து வளர்வதிலும் முக்கிய பங்காற்றினார். அப்படி அவர் வாய்ப்பளித்து வளர்த்த வீரர்களில் முகமது சிராஜ் மிகவும் முக்கியமானவர் என்றே சொல்லலாம்.

Mohammad-Siraj

- Advertisement -

ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜ் 2019ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே ரன்களை வாரி வழங்கியது போல் ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணியில் ரன்களை வாரி வழங்கி நிறைய வெற்றிகளை தாரை பார்த்தார். அதனால் உங்கள் தந்தையை போல் ஆட்டோ ஓட்ட செல்லுங்கள், அசோக் திண்டாவின் அடுத்த வாரிசு போன்ற கிண்டல்களை சந்தித்த அவரை நீக்குமாறு ஒரு கட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அண்ணன் மாதிரி:
ஆனால் அவரது திறமையை உணர்ந்த விராட் கோலி தொடர்ந்து பெங்களூரு அணியில் வாய்ப்பு கொடுத்ததை பயன்படுத்திய சிராஜ் 2021 சீசனில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த தொடங்கினார். குறிப்பாக தனது தந்தை இறப்புக்கு கூட நாடு திரும்பாமல் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அறிமுகமாகி வரலாற்று வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் 2022ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

Siraj

அதனால் தற்போது ஐசிசி ஒருநாள் தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் முன்னேறியுள்ள அவர் குறைந்த போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தை அடைந்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அப்படி ரன் மெஷின் பவுலர் என்று கிண்டல் அடிக்கப்பட்டவர் இன்று நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு விராட் கோலி தான் காரணம் என்று கடந்த மாதமே அவரை ரசிகர்கள் மனதார பாராட்டினர். சொல்லப்போனால் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தாம் இந்த நிலையை ஏற்றுவதற்கு விராட் கோலி தான் காரணம் என்று சிராஜ் வெளிப்படையாக பாராட்டியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் மோசமான தருணங்களில் அனைவரும் நீக்குமாறு சொன்ன போது முகமது சிராஜ்க்கு அண்ணனைப் போல் விராட் கோலி ஆதரவு கொடுத்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பழைய நினைவை பகிர்ந்து அவர் பேசியது பின்வருமாறு. “பெங்களூரு அணியில் 2020க்குப்பின் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு சிராஜ் தள்ளப்பட்டார். குறிப்பாக கடுமையான விமர்சனங்களால் அவர் அணியிலிருந்து நீக்கப்படும் நிலையை சந்தித்தார். ஆனால் அவருக்கு ஆதரவு கொடுத்த விராட் கோலி “சிராஜ் என்னுடைய 11 பேர் அணியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக நான் விளையாடினேன்”

Dinesh-Karthik-1

“அப்போது ஒரு லீக் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய சிராஜ் 3 விக்கெட்களை எடுத்து எங்களை 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அந்த போட்டியிலிருந்து அவருடைய டி20 கேரியர் அதிரடியான துவக்கம் பெற்றது. கிண்டல் நிறைந்த இந்த சமூகத்தில் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இந்தளவுக்கு அவர் வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும். அவரைப் பார்த்து நிறைய பேர் உத்வேகம் அடையலாம். விராட் கோலி அவருக்கு அண்ணனைப் போல் உதவி செய்தார். அவரை சிராஜ் எப்போதும் தன்னை நல்வழிப்படுத்துபவராக பார்க்கிறார்”

இதையும் படிங்க: வீடியோ : ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போடும் போது என்ன பண்றாரு பாருங்க – தல இவ்ளோ சிம்பிளா இருக்காரே

“கடினமான நேரங்களில் விராட் கோலி அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் அதை பாராட்டியுள்ளார். சிராஜ் வாழ்க்கையில் விராட் கோலி மற்றும் பரத் அருண் ஆகிய இருவரும் மிகவும் முக்கியமானவர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடினமான நேரங்களில் சிராஜை பயிற்சியாளராக வழி நடத்திய பரத் அருண் இந்த நிலைமை எட்டுவதற்கு முக்கிய காரணமாவார். அதே போல் விராட் கோலி கேப்டனாக ஆதரவு கொடுத்து பெரிய அளவில் ஜொலிக்க உதவி செய்தார்” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement