ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போடும் போது என்ன பண்றாரு பாருங்க – தல இவ்ளோ சிம்பிளா இருக்காரே

MS-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் அவர் பற்றிய செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமின்றி சமூக வலைதளத்தில் பெரிய அளவில் நாட்டம் இல்லாமல் இருக்கும் தோனி அவ்வப்போது எங்காவது வெளியில் இருந்தால் அவர் குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தோனி தனது ரசிகரின் பைக் ஒன்றில் ஆட்டோகிராப் செய்யும் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி எவ்வளவு பெரிய பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவருக்கு பிடித்தமான பல மோட்டார் சைக்கிள்களை அவர் கேரேஜ் ஒன்றை அமைத்து பாதுகாத்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

- Advertisement -

அந்த வகையில் புதுப்புது பைக்குகள் மட்டுமின்றி, விண்டேஜ் மற்றும் கிளாசிக் பைக்குகள் என எத்தனையோ பைக்குகளை தோனி தன்வசம் வைத்துள்ளார். அதுமட்டும் இன்றி அவர் அடிக்கடி பைக் ரைடு செய்யும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்நிலையில் தோனியை சந்திக்க வந்த ஒரு ரசிகர் தனது யமஹா ஆர்.டி 350 பைக்கை தோனியிடம் கொடுத்து ஆட்டோகிராப் போடுமாறும், அதுமட்டுமின்றி தோனியை ஒரு ரைட் சென்று தருமாறு கேட்டுக் கொண்டார்.

உடனே ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற தோனி அந்த பைக்கின் மீது ஆட்டோகிராப் போடுவதற்கு முன்னதாக தனது கையால் டேங்க்கின் மீது வைத்து அதனை சுத்தம் செய்துவிட்டு கையெழுத்து போட்டார். உலக அளவில் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு பெரிய ஜாம்பவானாக பார்க்கப்படும் தோனி ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கையொப்பமிட செல்வதற்கு முன்னதாக தானாக அந்த டேங்கை துடைத்துவிட்டு கையெழுத்து போட்ட அவரது எளிமை தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 100% ஃபிட்டாகி வந்துட்டேன், இந்த டைம் நிச்சயமா கப் ஜெயிக்கிறோம் – சிஎஸ்கே ரசிகர்கள் நல்ல செய்தி சொன்ன நட்சத்திர வீரர்

அதோடு கையொப்பமிட்ட பிறகு அந்த பைக்கில் ஒரு ரவுண்டு சென்ற தோனி அதன் பின்னர் அந்த பைக்கை ரசிகர்களிடம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். இது குறித்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement