100% ஃபிட்டாகி வந்துட்டேன், இந்த டைம் நிச்சயமா கப் ஜெயிக்கிறோம் – சிஎஸ்கே ரசிகர்கள் நல்ல செய்தி சொன்ன நட்சத்திர வீரர்

csk
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் டிசம்பர் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. முன்னதாக 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான கிரிக்கெட் அணியாக திகழும் சென்னை கடந்த வருடம் கேப்டன்ஷிப் குளறுபடிகள் மற்றும் ருதுராஜ் கைக்வாட் போன்ற முக்கிய வீரர்களின் சுமாரான செயல்பாடுகளால் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

Chahar4

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் சஹர் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியது சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்த ஜடேஜா தற்போது முழுமையாக குணமடைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது சென்னை அணிக்கு பலமாக உருவாகியுள்ளது. இருப்பினும் தீபக் சஹர் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருந்து வருகிறார். கடந்த 2018இல் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து 2018, 2021 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

குணமடைந்த சஹர்:
அதனால் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவரை 14 கோடி பெரிய தொகைக்கு கடந்த வருடம் சென்னை அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது சென்னைக்கு தோல்வியை கொடுத்த நிலையில் 2022 ஆசிய கோப்பையில் விளையாடாத அவர் அதிலிருந்து குணமடைந்து ஒரு சில போட்டிகளில் விளையாடிய நிலையில் மீண்டும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு காயமடைந்து வெளியேறினார். அதன் பின் குணமடைந்து டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் களமிறங்கிய அவர் மீண்டும் காயமடைந்து வெளியேறியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

Deepak-Chahar

இந்நிலையில் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் தீபக் சஹர் 100% முழுமையாக குணமடைந்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். அதனால் இம்முறை சென்னை அணிக்காக முழுமையாக விளையாடி கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஒரு உலகக் கோப்பையிலும் இந்தியாவுக்காக விளையாட முயற்சிக்க உள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய உடல் தகுதியில் கடந்த 2 – 3 மாதங்களாக நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். அதன் பயனாக தற்போது முழுமையாக ஃபிட்டாகியுள்ள நான் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறேன். நான் 2 பெரிய காயங்களை சந்தித்தேன். ஒன்று எலும்பு முறிவு மற்றொன்று க்வாட் கிரேட் 3 காயமாகும். அதனால் நான் பல மாதங்களாக விளையாடவில்லை. பொதுவாக அனைவருக்கும் காயத்திலிருந்து குணமடைய குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக நேரம் எடுக்கும். ஒருவேளை நான் பேட்ஸ்மேனாக இருந்தால் முன்கூட்டியே விளையாட துவங்கியிருப்பேன்”

chahar

“ஆனால் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் எலும்பு முறிவிலிருந்து விரைவாக குணமடைந்து விளையாடுவது கடினமாக இருக்கிறது. என்னைப் போலவே மேலும் சில பவுலர்கள் தடுமாறுவதை உங்களால் பார்க்க முடியும். எப்போதும் நான் ஒரு விதிமுறையில் விளையாடுகிறேன். அதாவது நான் விரும்பும் வகையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றை செய்தால் என்னையும் எனது வாய்ப்பையும் யாரும் தடுக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் தான் என்னுடைய கேரியரை துவங்கினேன்”

இதையும் படிங்க:அவர் தான் கிரிக்கெட்டின் அடுத்த சூரியகுமார் – இளம் அதிரடி வீரரை மனதார பாராட்டும் ஏபி டீ வில்லியர்ஸ்

“எனவே தற்சமயத்தில் இந்திய அணியில் யார் விளையாடுகிறார் விளையாடவில்லை என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. மாறாக முழுமையாக குணமடைந்து பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் 100% சிறப்பாக செயல்படும் முயற்சியுடன் பயிற்சி எடுத்து வருகிறேன். அதை செய்தால் எனக்கான வாய்ப்பு தாமாக கிடைக்கும்” என்று கூறினார். முன்னதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கைல் ஜெமிசன் தாயத்தால் வெளியேறியுள்ள நிலையில் இவரது வருகை சென்னை ரசிகர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது.

Advertisement