அவர் தான் கிரிக்கெட்டின் அடுத்த சூரியகுமார் – இளம் அதிரடி வீரரை மனதார பாராட்டும் ஏபி டீ வில்லியர்ஸ்

AB DE villiers Suryakumar Yadav
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாகப் போராடி ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பொதுவாக 20+ வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானதாலோ என்னவோ தெரியவில்லை கடந்த 2 வருடங்களில் களமிறங்கிய பெரும்பாலான டி20 போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

Suryakumar-Yadav

- Advertisement -

அந்த வகையில் கடந்த வருடம் அதிக ரன்கள் மற்றும் சிக்ஸர்களை அடித்து விராட் கோலி உள்ளிட்ட இதர இந்திய வீரர்களை மிஞ்சி அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற அவர் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் வென்றார். அதை விட எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்பது போல பவுலர்கள் எப்படி வீசினாலும் அதை யாருமே எதிர்பாராத புதுப்புது ஷாட்டுகளை பயன்படுத்தி மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விடும் அவரை ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய முன்னாள் வீரர்களும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பாராட்டி வருகிறார்கள்.

அடுத்த சூரியகுமார்:
சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 360 டிகிரியிலும் வித்தியாசமான ஷாட்களை அறிமுகப்படுத்தி புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய ஏபி டீ வில்லியர்ஸ் விரைவில் தம்மை நீங்கள் மிஞ்சப் போவதாக சூரியகுமாரை பாராட்டினார். இந்நிலையில் தம்மை மிஞ்சும் அளவுக்கு அதிரடியாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் போல வருங்காலத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் செயல்படுவார் என்று ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். சமீப காலங்களாகவே அதிரடியாக செயல்பட்டு வரும் தேவால்ட் ப்ரேவிஸ் 2022 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் (506) குவித்த வீரராக உலக சாதனை படைத்து தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

brevis 3

அதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் 2022 சீசனில் அதிரடியாக 161 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் அவர் பேட்டிங் செய்யும் விதம் கிட்டத்தட்ட ஏபி டீ வில்லியர்ஸ் போலவே உள்ளது. அதனால் ஏற்கனவே குட்டி ஏபிடி என்று ரசிகர்கள் கொண்டாடும் அவர் அடுத்த சூரியகுமார் யாதவாக வருவார் என்று ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“போட்டியை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதில் அந்த இருவருமிடையே நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மிகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யக்கூடிய அந்த இருவருமே பவுலர்களை ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக இருவருமே ஆரம்பத்திலேயே எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் அதிரடியாக விளையாடுகிறார்கள். இருப்பினும் மிகவும் இளம் வீரரான தேவால்ட் ப்ரேவிஸ் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது”

ABD

“மறுபுறம் சூரியகுமார் மிகவும் அனுபவமிக்க வீரராக செயல்பட்டு வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கடுமையாக போராடி இந்த நிலையை எட்டியுள்ளார். ஆனால் இந்த இருவருமே தற்சமயத்தில் என்னை மிகவும் கவர்ந்த வீரர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார். அப்படி தென்னாபிரிக்காவை சேர்ந்த ஜாம்பவான் தங்கள் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரை இந்தியாவைப் சேர்ந்த சூரியகுமார் போல வருவார் என்று பாராட்டுவது இந்திய ரசிகர்களுக்கு பெருமையாகும்.

இதையும் படிங்க:நீங்க ராய்ஸ் ரோல்ஸ் – ஆனா அத செஞ்சா தான் ஃபார்முக்கு திரும்ப முடியும் – கேஎல் ராகுலுக்கு ஸ்ரீகாந்த் கொடுத்த அட்வைஸ் என்ன

அத்துடன் என்ன தான் அனுபவமிக்க வீரராக இருந்தாலும் உங்களது பேட்டிங்கை பார்த்து நானும் சில ஷாட்டுகளை கற்று வருவதாக கடந்த மாதம் தேவால்ட் பிரேவிஸை சூரியகுமார் யாதவ் நேரடியாக பாராட்டியிருந்தார். மொத்தத்தில் நிகழ்கால மற்றும் எதிர்கால 360 டிகிரி பேட்ஸ்மேன்கள் தங்களது அணியில் விளையாடுவது மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement