நீங்க ராய்ஸ் ரோல்ஸ் – ஆனா அத செஞ்சா தான் ஃபார்முக்கு திரும்ப முடியும் – கேஎல் ராகுலுக்கு ஸ்ரீகாந்த் கொடுத்த அட்வைஸ் என்ன

Kris Srikkanth
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த ஒரு வருடமாகவே சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று பெறுவது மிகப்பெரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கடந்த 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான தொடக்க வீரராக உருவெடுத்த அவர் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாடாமல் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஏற்பட்ட உச்சகத்த விமர்சனங்களை சமாளிக்க முடியாத பிசிசிஐ ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன் பதவியைப் பறித்து மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் வாய்ப்பு கொடுத்துள்ளது.

KL Rahul Dravid

- Advertisement -

அந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கொடுக்கப்படும் வாய்ப்பில் சுமாராக செயல்படும் அவருக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்துள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ள அவருக்கு இந்த மோசமான தருணத்தில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் அட்வைஸ்:
ஆனால் அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு ஏன் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில், சர்பராஸ் கான் போன்றவர்களுக்கும் முந்தைய போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றும் அடுத்த போட்டியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட குல்தீப் யாதவிற்கும் கிடைக்கவில்லை என்று வெங்கடேஷ் பிரசாத் போன்ற முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அத்துடன் கிளாஸ் நிறைந்த வீரரான ராகுலை யாரும் இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்லவில்லை.

Gill

மாறாக இந்த மோசமான தருணத்தில் வரலாற்றில் சச்சின் முதல் கங்குலி வரை பல ஜாம்பவான்கள் செய்தது போல் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று நல்ல ரன்களை அடித்து பார்மையும் தன்னம்பிக்கையும் மீட்டெடுத்து மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வருமாறு தான் சொல்கிறார்கள். இந்நிலையில் ராய்ஸ் ரோல்ஸ் என்று தாம் எப்போதும் அழைக்கக்கூடிய ராகுல் மிகச் சிறந்த கிளாஸ் வீரர் என்றாலும் தற்சமயத்தில் தடுமாறுவதால் சிறிய இடைவெளி எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இது டெக்னிக்கல் அளவிலான தடுமாற்றம் அல்ல என்று தெரிவிக்கும் அவர் ராகுல் மனதளவில் தடுமாறுவதால் நிச்சயம் பிரேக் எடுத்துக்கொண்டால் மட்டுமே மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்ப முடியும் என்று கூறியுள்ளார். எனவே அவருக்கு பதில் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கும் ஸ்ரீகாந்த் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

SRIKKANTH

“நான் எப்போதும் ராகுலிடம் இருக்கும் கிளாஸை ரசிப்பவன். சொல்லப்போனால் நான் அவரை ரோல்ஸ் ராய்ஸ் ராகுல் என்று தான் அழைப்பேன். ஆனால் தற்சமயத்தில் அவருக்கு எதுவும் சாதகமாக நடைபெறவில்லை. எனவே ஒருவேளை நான் தற்போது தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அவரிடம் நேரடியாக சென்று சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளுமாறு வெளிப்படையாக சொல்வேன். மேலும் தற்சமயத்தில் டெக்னிக்கல் அளவில் அவரிடம் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”

இதையும் படிங்க:வீடியோ : ஜாம்பவான்கள் சந்தர்பால் மகனை அவுட்டாக்கிய மகாயா நிடினி மகன் – அனல் பறக்கும் அடுத்த தலைமுறை

“மனதளவில் தாக்கத்தை சந்தித்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். எனவே இதிலிருந்து திரும்ப ராகுல் சில இடைவெளி எடுத்துக்கொண்டு தனது மனதை நிலைப்படுத்த வேண்டும். அதன் பின் அவரால் முன்பு போல அதிரடியாக விளையாட முடியாது என்று சொல்வதற்கு எந்த காரணமும் கிடையாது. எனவே ராகுல் மீது மரியாதை இருந்தாலும் தற்போது அவருக்கு பதிலாக சுப்மன் கில் விளையாட வேண்டும். ஏனெனில் அவரைப் போன்ற வாழ்நாளின் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஒருவரை நீங்கள் தொடர்ந்து காத்திருக்க வைக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement