வீடியோ : ஜாம்பவான்கள் சந்தர்பால் மகனை அவுட்டாக்கிய மகாயா நிடினி மகன் – அனல் பறக்கும் அடுத்த தலைமுறை

- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் டெஸ்ட் தொடர் பிப்ரவரி 28 முதல் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 16, 18, 21 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடரும் மார்ச் 25, 26, 28 ஆகிய தேதிகளில் டி20 தொடரும் நடைபெறுகிறது. இந்த அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா பயணித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் சில பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.

குறிப்பாக முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்கா வரவேற்பு லெவல் அணிக்கு எதிராக கிரைக் ப்ரத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. அந்த போட்டியில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் சிவ்நரேன் சந்தர்பால் அவர்களது மகன் தக்நரேன் சந்தர்பால் களமிறங்கியுள்ளார்.

- Advertisement -

அனல் பறக்கும் அடுத்த தலைமுறை:
சமீப காலங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒருமுறை தமது தந்தையுடன் விளையாடி மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து உலக அளவில் கவனம் ஈர்த்த அவர் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தனது தந்தையைப் போலவே களமிறங்கியதும் பெய்ல்ஸை எடுத்து தனது பேட்டிங் கார்ட்டை உருவாக்கி வித்தியாசமான கோணத்தில் அச்சு அசலாக தனது தந்தையைப் போலவே நின்று விளையாடிய அவருடைய பேட்டிங்கை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள்.

மேலும் அறிமுக போட்டியில் அரைச்சதம் அடித்து அசத்திய அவர் சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தந்தை – மகன் ஜோடி என்ற சாதனை படைத்த அவருக்கு இப்போட்டியில் சவால் கொடுக்கும் வகையில் தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிடினி அவர்களின் மகன் தண்டோ நிடினி களமிறங்கினார்.

- Advertisement -

தனது தந்தையை போலவே அதிரடி வேகப்பந்து வீச்சாளராக செயல்படும் அவருக்கு எதிராக பேட்டிங் செய்த தக்நரேன் சந்திரபால் கவர் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத தண்டோ நிடினி தற்போது தான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கி 4 போட்டிகளில் ஒரு அரை சதமடித்து ஆல் ரவுண்டராக உருவெடுத்து வருகிறார். அந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி பாராட்டும் வகையில் செயல்பட்டு வரும் தக்நரேன் சந்தர்பாலை அவுடாக்கியுள்ள அவர் ரசிகர்களை தன்னையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் சிவ்நரேன் சந்தர்பாலை 7 முறை மகாயா நிடினி அவுட்டாக்கி வெற்றிகரமாகவே செயல்பட்டுள்ளார். தற்போது அவரைப் போலவே அவருடைய மகன் சந்தர்பால் மகனை சந்தித்த முதல் போட்டியில் அவுட்டாக்கியுள்ளார். இதனால் சந்தர்பால் – நிடினி மோதிய பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் ரசிகர்கள் வருங்காலங்களில் இவர்களும் தங்களது தந்தையைப் போலவே அனல் பறக்க மோதிக் கொள்வார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க:TNPL : முதல் வீரராக ஏலத்தில் வாங்கப்பட்ட விஜய் ஷங்கர். எத்தனை இலட்சம்? – எந்த அணிக்கு தெரியுமா?

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் அந்த கேட்சை பிடித்த கோர்பின் போஸ் 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் டெர்டியூஸ் போஸ்க் அவர்களது மகன் ஆவார். இதை அறியும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் ஒரு தலைமுறை வீரர்களின் மகன்கள் வந்து இந்த தலைமுறையில் அனல் பறக்கும் கிரிக்கெட்டை விளையாட துவங்கி விட்டதை அறியும் போது தான் நமக்கு ஓரளவு வயதாகி விட்டது என்பதை உணர முடிவதாக சமூக வலைதளங்களில் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement