டி20 உலககோப்பை : மேலும் 2 வீரர்கள் காயம். அணியில் ஏற்படவுள்ள மிகப்பெரிய மாற்றம் – கடைசி நேர ட்விஸ்ட்

IND
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐபிஎல் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் முடிவடைய இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அதாவது அக்டோபர் 17ஆம் தேதி முதல் உலக கோப்பை டி20 தொடரானது அங்கு துவங்க இருக்கிறது. அதன்படி ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை அங்கு நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி வரை அணிகளுக்குள்ளேயான மாற்றங்கள் குறித்த விவரங்களை இறுதி படுத்திக் கொள்ளலாம் என ஐசிசி அனைத்து அணிகளுக்கும் கெடு விதித்துள்ளது.

cup

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சில வீரர்களின் மோசமான பார்ம் தற்போது அணியில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி இல்லாமல் தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இரண்டு வீரர்கள் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது குறித்த ஆலோசனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆலோசகர் தோனி மற்றும் கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஆகியோரது முன்னிலையில் நடைபெறும் என்றும் இந்த கூட்டம் முடிந்த பிறகு இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளன. எனினும் காயமடைந்த அந்த இரண்டு வீரர்கள் யார் ? என்ற தகவல் வெளியாகவில்லை என்றாலும் இரண்டு வீரர்கள் வெளியேற போகிறார்கள் என்ற செய்தி மட்டும் வெளியாகி உள்ளது.

IND

மேலும் அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ள பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல், கொல்கத்தா அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் விரைவில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15ஆம் தேதி வரை அணியில் உள்ள மாற்றங்களுக்கு கெடு இருப்பதனால் நிச்சயம் நாளை இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை நீக்கி ஷர்துல் தாகூருக்கு இடம் கொடுத்த – பி.சி.சி.ஐ

இந்திய அணியானது இந்த உலக கோப்பை தொடரில் முதல் ஆட்டமாக 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக சில பயிற்சி போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement