டி20 உலகக்கோப்பை : இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை நீக்கி ஷர்துல் தாகூருக்கு இடம் கொடுத்த – பி.சி.சி.ஐ

Shardul-Thakur
Advertisement

இந்தியாவில் நடைபெற இருந்த 7-ஆவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் உடனடியாக டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது ஆயத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது.

cup

இந்நிலையில் இந்த இரண்டு உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சில வீரர்களின் பார்ம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் பார்ம் அதிக அளவு விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் பவுலிங் செய்யாத அவர் பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்களிடையே கோரிக்கை வலுத்தது. அதுமட்டுமின்றி அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் மாற்று வீரர்களை அறிவிக்க வேண்டும் எனவும் ஐசிசி-யும் கெடு விதித்து இருந்தது. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா அணியில் இருந்து நீக்கப்படாமல் அதிரடியாக அக்சர் பட்டேல் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மாற்று வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

thakur 1

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் கிடையாது. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியல் இதோ :

1) ரோகித் ஷர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) இஷான் கிஷன், 5) சூர்யகுமார் யாதவ், 6) ரிஷப் பண்ட், 7) ஹர்திக் பாண்டியா, 8) ரவீந்திர ஜடேஜா, 9) அஷ்வின், 10) ராகுல் சாகர், 11) வருன் சக்ரவர்த்தி, 12) முகமது ஷமி, 13) ஜஸ்பிரித் பும்ரா, 14) புவனேஷ்வர் குமார், 15) ஷர்துல் தாகூர்

ரிசர்வ் வீரர்கள் : தீபக் சாகர், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல்

Advertisement